Thursday, April 18, 2013

யாழ்ப்பாண‌த்து வேளாள‌ர்க‌ள் ஆண்ட‌ ப‌ரம்ப‌ரையே !


ஈழத்தமிழர்களின் வரலாற்றை சில‌  சிங்களவர்களின் கட்டுரைகளையும் இலங்கை அரசின் தயவில் கல்விகற்ற, இனவெறி பிடித்த சிங்கள சரித்திரப் பேராசிரியர்களின் நல்ல பெயர் வாங்கினால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற நிலையிலிருந்த சில தமிழர்களால் எழுதப்பட்டவற்றையும்   நுனிப்புல் மேய்ந்து விட்டு 'யாழ்ப்பாணத்து வேளாளர்கள் ஆண்ட பரம்பரையே இல்லை 'என்று  கூறிய‌ அறியாமை நிறைந்த‌ அதிக‌ப் பிர‌ச‌ங்கித்த‌ன‌ம் க‌ண்டிக்கப்ப‌ட‌ வேண்டிய‌து                                                                                                 
ஈழ‌த்த‌மிழ‌ர்களின் வ‌ரலாற்றை அறிய‌விரும்பினால், அதைப் ப‌ற்றி விவாதிப்பதும், அல்ல‌து விள‌க்கம் கேட்ப‌தும் வேறு விட‌ய‌ம் ஆனால் இப்படி அடாவ‌டித்த‌ன‌மாக‌ த‌லைப்பு எழுதினால் தான் தாம் எழுதுவ‌தை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் வாசிப்பார்க‌ள் என்ப‌த‌ற்காக ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளில் பெரும்பான்மையான‌ ம‌க்க‌ளின் வ‌ர‌லாற்றை ம‌ட்டும் இழிவு ப‌டுத்துவ‌து க‌ண்டிக்க‌த் த‌க்க‌தொன்று.  இந்தியாவைப் போல் இல‌ங்கையில் சாதிய‌டிப்ப‌டையில் க‌ட்சிக‌ளும் கிடையாது, எங்க‌ளிட‌ம் சாதிச்சான்றித‌ழ்க‌ளும் கிடையாது, சாதிய‌டிப்ப‌டையில் சலுகைக‌ளும் கிடையாது, அத‌னால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் எவ‌ரும் சாதியைப்ப‌ற்றி பெரிதாக அலட்டிக்கொள்வ‌தில்லை. ஆனால் குறிப்பாக ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளில் ஒரு பிரிவின‌ரை ம‌ட்டும் குறிப்பிட்டு பொய்க‌ளை வ‌ர‌லாற்று உண்மைகளாக‌ மாற்ற‌ முனையும் போது அத‌ற்கு ப‌தில‌ளிப்ப‌து எங்க‌ளின் க‌ட‌மையாகும்.
                                                                                                      The Royal Flag of Jaffna Kingdom
.

யாழ்ப்பாண‌ வைப‌வ‌மாலை

யாழ்ப்பாண‌த்தின் ச‌ரித்திர‌த்தைக் கூறும் யாழ்ப்பாண‌ வைப‌வ‌மாலை யாழ்ப்பாண‌ அர‌சு உருவாகுமுன்பே த‌மிழ‌ர்க‌ள் அதிலும் குறிப்பாக‌ வேளாள‌ர்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் வாழ்ந்தார்கள் என்ப‌தைக் குறிப்பிடுகிற‌து. அதாவ‌து ம‌துரைக்குச் சென்று பாண்டிய‌ம‌ன்னனை யாழ்ப்பாண‌த்துக்கும் ம‌ன்னனாக‌ முடிசூடுமாறு,  பாண்டி ம‌ழ‌வ‌ன் என்னும் வேளாள‌ப்பிர‌பு ம‌துரைக்குப் போய்  "யாழ்ப்பாண‌த்தில் நிலைப‌ர‌த்தை அறிவித்து யாழ்ப்பாண‌த்தை அர‌சாட்சி செய்ய‌வ‌ர‌ வேண்டுமென‌க் கேட்க‌" பாண்டிய‌  ம‌ன்ன‌ன் த‌ன‌து இள‌வ‌ர‌ச‌னை அனுப்பிய‌தாக‌க் குறிப்பிடுகிற‌து யாழ்ப்பாண‌ வைப‌வ‌மாலை

சிங்க‌ள‌வ‌ர்க‌ளின்  மகா வ‌ம்ச‌த்தின் மூலம் எப்ப‌டி இல‌ங்கையின் வ‌ர‌லாற்றைப் புரிந்து கொள்ள‌ முடிகிற‌தோ அதே போல் யாழ்ப்பாண‌ வைப‌வமாலை மூல‌மும் அக்கால‌ யாழ்ப்பாண‌த்தின் வ‌ர‌லாற்றையும், அங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ளையும், ம‌ன்ன‌ர்க‌ளின் விப‌ர‌ங்க‌ளையும் அறிந்து கொள்ள‌ முடியும். அத‌னால் சில‌ர் குறிப்பிடுவ‌து போல் யாழ்ப்பாண‌ வெள்ளாள‌ர்க‌ள் ஆரிய‌ச்ச‌க்கர‌வ‌ர்த்திக‌ளின் கால‌த்தின் பின்னால் குடியேற‌வில்லை அவ‌ர்க‌ள் இல‌ங்கையில் அத‌ற்கு முன்பாக‌வே வாழ்ந்தன‌ர், வெறும் குடிம‌க்க‌ளாக‌ அல்ல‌, அர‌ச‌னைத் தீர்மானிக்கும் பிர‌புக்க‌ளாக‌வும் வாழ்ந்தார்க‌ள்  என்ப‌தற்கு யாழ்ப்பாண‌ வைப‌வமாலையில் ஆதார‌ம் உண்டு. இன்றும் யாழ்ப்பாண‌த்தில் ப‌ல‌ வேளாள‌ குடும்ப‌ங்க‌ளால் யாழ்ப்பாண‌ அர‌ச‌ப‌ர‌ம்ப‌ரையிலிருந்து த‌ம‌து குடும்ப‌ங்க‌ளின் வேர்க‌ளுக்கு ஆதார‌ம் காட்ட‌முடியும். 
Small Lake in the Nallur Palace, Ruins of Jaffna Kingdom,

யாழ்ப்பாண‌த்து அர‌ச‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளும் அவ‌ர்க‌ளின் ஆட்சிக்கால‌மும்

 

கூழ‌ங்கைச் ச‌க்க‌ர‌வ‌ர்த்தி (க‌லிங்க‌ மாக‌ன்) ‍செக‌ராச‌சேக‌ர‌ன் -   Circa 1215பாண்டிய‌ இள‌வ‌ர‌ச‌ன், க‌லிங்க‌ப் போர்க‌ளில் ஈடுப‌ட்டு க‌லிங்க‌த்தின் சில‌ ப‌குதிக‌ளை ஆண்டிருக்க‌லாம், கலிங்கப் போரில் கை ஊனமுற்றதால் கூழங்கைச் சக்கரவர்த்தி என்றழைக்கப்பட்டான். அதுவே கலிங்கம் என்று தவறாக கருதப்பட்டதாகவும் கூறுவர். ஆனால் சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் சூள‌வ‌ம்ச‌ம் இந்த மண்ணினை த‌மிழ்பேசிய, சைவ‌ச‌ம‌ய‌த்தைச் சார்ந்த‌ த‌மிழ‌ன், த‌மிழ‌ர்க‌ளுக்குச் சார்பாக‌ ஒருதலைப்ப‌ட்ச‌மாக‌ ந‌ட‌ந்து சிங்க‌ள‌வ‌ர்க‌ளைத் துன்புறுத்திய‌வ‌ன் என்கிற‌து. சில‌ர் இவ‌ன் இராம‌நாத‌புர‌ம் அர‌ச‌ப‌ர‌ம்ப‌ரைக்கு உற‌வின‌ன் என‌வும் குறிப்பிடுகின்ற‌ன‌ர்.ச‌ந்திர‌பானுவும் அவ‌ன் ம‌க‌ன் தாம்ப‌ர‌லிங்க‌ம் - 1255 -1262

நாடு பிடிக்க‌வ‌ந்த‌ சாவ‌க‌ நாட்ட‌ர‌ச‌ன், ஆனால் பாண்டிய‌ர்க‌ளின் தய‌வினால் தான் அர‌சைத் தொடர‌முடிந்தது. இல‌ங்கை அர‌ச‌ன் முத‌லாம் ப‌ராக்கிர‌ம‌பாகு,  பாண்டிய‌ இள‌வ‌ர‌ச‌ன் மானாப‌ர‌ண‌னுக்கும், சிங்க‌ள இள‌வ‌ர‌சி மித்தாவுக்கும் பிற‌ந்த‌வ‌ன், அதனால் பராக்கிர‌ம‌பாகுவின் வ‌ழிவ‌ந்த‌வ‌ர்க‌ளுட‌ன் பாண்டிய‌ர்க‌ள் நெருங்கிய‌ ந‌ட்பு பூண்டிருந்த‌ன‌ர். அத்துட‌ன் சோழ‌ர்க‌ளை எதிர்த்த‌ பாண்டிய‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் கூட்டுச்சேர்ந்த‌ன‌ர். இது தான் த‌மிழ‌ர்க‌ளின் சாபக்கேடு. 2000 வருட‌ங்க‌ளாக‌ ஒரு த‌மிழ‌னை, இன்னொரு த‌மிழ‌னுட‌ன் மோத‌ விட்டே இல‌ங்கையில் த‌ம்முடைய‌ இருப்பைத் த‌க்க‌ வைத்துக் கொள்கின்ற‌ன‌ர் சிங்க‌ள‌வ‌ர்க‌ள், அது வேறு க‌தை. அத‌னால் பாண்டிய‌ர்க‌ள் சிங்க‌ள‌ அர‌ச‌ன் இர‌ண்டாம் ப‌ராக்கிர‌ம‌பாகுவுக்கு உத‌வும் வ‌கையில் ச‌ந்திர‌பானுவைத் தோற்க‌டித்த‌ன‌ர். த‌ந்தையின‌தும் ம‌க‌ன‌தும் ஆட்சி வெறும் ஏழு வ‌ருட‌ங்க‌ளாக‌ இருந்தாலும், ச‌ந்திர‌பானுவை யாழ்ப்பாண‌ அர‌சின் இர‌ண்டாவாது ம‌ன்ன‌ராக‌க் க‌ருதுவ‌ர்.


குல‌சேக‌ர‌ன் ப‌ரராச‌சேகர‌ன் I  (1262-1284)
த‌ந்தையைப் போல் தாம்ப‌ர‌லிங்க‌மும் பாண்டிய‌ர்க‌ளின் சொற்ப‌டி ந‌ட‌க்க‌ ம‌றுத்ததால், பாண்டிய‌ அரச‌ன் த‌ன‌து த‌ள‌ப‌தி குல‌சேக‌ர‌பாண்டிய‌னை அனுப்பி தாம்பர‌லிங்க‌தைக் கொன்று குல‌சேக‌ர‌ன் பர‌ராச‌சேக‌ர‌ன் என்ற‌ பெய‌ரில் யாழ்ப்பாண‌ அர‌ச‌னானான். யாழ்ப்பாண‌ அர‌ச‌ர்க‌ள் ப‌ரராச‌சேக‌ர‌ன்  அல்ல‌து  செக‌ராசாசேக‌ர‌ன் என்ப‌தை த‌ம‌து முடிசூடும் பெயராக்கிக் கொண்ட‌ன‌ர்.
குலோத்துங்க‌ செக‌ராச‌சேக‌ர‌ன் I -  1284- 1292

விக்கிர‌ம ப‌ராராச‌சேக‌ர‌ன் II     (1292- 1302)
குலோத்துங்க‌ன் ம‌க‌ன் விக்கிர‌ம‌ன் இர‌ண்டாவ‌து ப‌ரராச‌சேக‌ர‌னாக‌ முடிசூடிக் கொண்டான்.

வ‌ரோத‌ய‌ன் செக‌ராச‌சேக‌ர‌ன்  III    (1302-  1325)
த‌ந்தைக்குப் பின்ன‌ர் வ‌ரோத‌ய‌ன் மூன்றாவ‌து ப‌ர‌ராச‌சேக‌ர‌னாக‌ முடிசூடிக் கொண்டான்.

ஜெய‌வீர‌ன் செக‌ராச‌சேகர‌ன் V  ( 1380 1410)

குண‌வீர‌ன் ப‌ர‌ராச‌சேக‌ர‌ன் V  ( 1410- 1446)

க‌ன‌க‌சூரிய‌ன் செக‌ராச‌சேக‌ர‌ன் VI  (1446 - 1450)
குண‌வீர‌னுடைய‌ ம‌க‌ன் க‌ன‌க‌சூரிய‌னின் ஆட்சி சிங்க‌ள‌ அர‌ச‌ன் ப‌ராக்கிர‌ம‌பாகு VI இன் வ‌ள‌ர்ப்பும‌க‌ன் சிங்க‌ள‌த்தில் ச‌ப்புமல்குமார‌ய‌ என‌ அழைக்க‌ப்ப்டும் செண்ப‌க‌ப்பெருமாளால் வீழ்த்தப்பட்டது.

செண்ப‌க‌ப்பெருமாள் (ச‌ப்பும‌ல் குமார‌ய‌)))) -  (1450 1467)

கோட்டை(கொழும்பு) இராச‌தானியை ஆண்ட‌ சிங்க‌ள‌ அர‌ச‌ன் ப‌ராக்கிர‌ம‌பாகுVI இன் வ‌ள‌ர்ப்பு ம‌க‌ன். யானைக‌ளைப் பராம‌ரிக்கும் ப‌ணிக்க‌ன் ஒருவ‌ன‌து ம‌க‌ன்.

க‌ன‌க‌சூரிய‌ன் செக‌ராச‌சேக‌ர‌ன் VI ( 1467 -1478)
இராம‌நாத‌புர‌த்துக்குத் த‌ப்பியோடிய‌ கனக‌சூரிய‌ன் அங்கிருந்து ப‌டைக‌ளுட‌ன் வ‌ந்து  மீண்டும் யாழ்ப்பாண‌த்தைக் கைப்ப‌ற்றி அர‌சாண்டான்.

ப‌ரராசசேக‌ர‌ன் VI  (1478 - 1519)
சிம்மாச‌ன‌ப் பெயரால் ம‌ட்டும் அறியப்ப‌டும் க‌ன‌க‌சூரிய‌னின் இள‌வ‌ர‌ச‌ன்.


ம‌ந்திரி ம‌னை

யாழ்ப்பாண‌ அர‌ச‌ர்க‌ள் த‌ம்மை ஆரிய‌ச்ச‌க்கர‌வ‌ர்த்திக‌ள் என‌ அழைத்துக்கொண்டாலும் அது அவ‌ர்க‌ளின் ப‌ட்ட‌ப்பெய‌ரே த‌விர‌ அவ‌ர்க‌ள் ஆரிய‌ர்க‌ள‌ல்ல‌, அது அவர்களின் இயற்பெயருமல்ல த‌மிழ்ப்பாண்டிய‌ இள‌வ‌ர‌ச‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌ர‌ராச‌சேக‌ர‌ன் அல்ல‌து செக‌ராச‌சேக‌ர‌ன் என்ப‌தையே த‌மது சிம்மாச‌ன‌ப் பெய‌ர்க‌ளாக‌க் கொண்டிருந்த‌ன‌ர். சேக‌ர‌ன் என்ப‌து பாண்டிய‌ அர‌ச‌குல‌த்தின் பெய‌ர் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

1505
 இல் இல‌ங்கைக்குப் போத்துக்கேய‌ர் வ‌ந்த‌டைந்த‌ன‌ர், மிக‌வும் குறுகிய‌கால‌த்தின் இல‌ங்கையில் அர‌சிய‌லில் மூக்கை நுழைக்க‌த் தொட‌ங்கின‌ர். ஆறாவ‌து பர‌ராச‌சேக‌ர‌னுக்கு இர‌ண்டு முக்கிய‌மான‌ அர‌சிகளும் ப‌ல‌ அந்த‌ப்புர‌மாத‌ர்க‌ளும் இருந்த‌ன‌ர். முத‌லாவ‌து ம‌னைவி ராஜ‌ல‌ட்சுமிய‌ம்மாள், சோழ‌ இள‌வ‌ர‌சி என‌க் குறிப்பிட்டாலும், இக்கால‌த்தில் சோழ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டில் ஆட்சியில் இல்லை. 1279 இலேயே ராஜேந்திர‌சோழன் V த‌ன‌து ஆட்சியைத் த‌மிழ்நாட்டில் இழ‌ந்து விட்டான். அத‌னால் இராச‌ல‌ட்சுமி அம்மாள் யாழ்ப்பாண‌த்தில் குடியேறிய‌ சோழ‌த‌ள‌ப‌திக‌ளின் ம‌க‌ளாக‌ இருக்க‌லாம் என‌க் க‌ருத‌ப்ப‌டுகிற‌து. இர‌ண்டாவ‌து ம‌னைவி வ‌ள்ளிய‌ம்மை,  யாழ்ப்பாண‌த்தில் அக்காலத்திலிருந்த‌ வேளாள‌ப்பிர‌புக்க‌ளில் ஒருவ‌ராகிய‌ பொன்ப‌ற்றியூர் பாண்டிம‌ழ‌வ‌ன் குடும்ப‌த்தைச் சேர்ந்த‌ வேளாள‌ப் பெண், அவ‌ள‌து ம‌க‌ன் தான் இள‌வ‌ர‌ச‌ன் ப‌ர‌நிருப‌சிங்க‌ம்.  அர‌ச‌னது மூன்றாவ‌து ம‌னைவி ம‌ங்க‌ள‌த்த‌ம்மாளுக்கு  ம‌க‌ன் ச‌ங்கிலிகுமார‌னும் மக‌ள் ப‌ர‌வையும் பிற‌ந்தார்க‌ள். 

ச‌ங்கிலி  ப‌ர‌ராச‌சேக‌ர‌ன் VII ( 1519 - 1561)
சூழ்ச்சியால் ச‌ங்கிலி வேளாள‌ இள‌வ‌ர‌ச‌ன் ப‌ர‌நிருப‌சிங்க‌த்திட‌மிருந்து ஆட்சியைக் கைப்ப‌ற்றினான். திருக்கோவலூர்க்குத் த‌ப்பியோடிய‌ ப‌ர‌நிருப‌சிங்க‌ன் திரும்பி வ‌ந்து ஏழூர்க‌ளுக்க‌திபதியாக‌வும், ச‌ங்கிலிய‌னின் ம‌ந்திரியாக‌வுமிருந்தான். (யாழ்ப்பாண‌வைப‌வ‌ கெளமுதி)

புவிராச‌ப‌ண்டார‌ம் (1561- 1565)
 ச‌ங்கிலி ம‌க‌ன், போத்துக்கேய‌ரின் உத‌வியுட‌ன் ஆட்சியைக் கைப்ப‌ற்றினான். 

குறிஞ்சி ந‌யினார்( காசிநயினார்) ப‌ர‌ராச‌சேக‌ர‌ன்  (USURPER) - 1565 - 1570

புவிராச‌ப‌ண்டார‌ம் போத்துக்கேய‌ரின் கைப்பொம்மையாக‌ முடிசூடி நான்கு வ‌ருட‌ங்க‌ளில் யாழ்ப்பாண‌ அர‌சு குறிஞ்சிந‌யினாரால் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌து. இல‌ங்கையில் ந‌யினார் (நைனா அல்ல) என்ப‌து வெள்ளாள‌ர்க‌ளைக் குறிக்கும் பெயர். பெண்கள் நாச்சியார் என‌ அழைக்க‌ப்ப‌டுவ‌ர், ஆனால் **வ‌ன்னிச் சிற்ற‌ர‌ச‌ர்க‌ளின் பெண்களையும் நாச்சியார் என‌ அழைக்கும் வ‌ழ‌க்க‌மிருந்த‌து. அர‌சி வ‌ன்னிநாச்சியார் ஈழ‌த்தில் வீர‌த்துக்குப் பெய‌ர் பெற்றவ‌ர்.

பெரிய‌பிள்ளை (USURPER)  (1570 - 1582)

இன்றும் த‌மிழ்நாட்டிலுள்ள‌து போன்றே அன்றைய‌ இல‌ங்கையில் பிள்ளை, முத‌லி, என்ப‌ன‌ வெள்ளாள‌ரை ம‌ட்டும் குறிக்கும் பெயர். சிங்கம் என்பது வெள்ளாளர்களின் பட்டப்பெயர்.

புவிராச‌ப‌ண்டார‌ம் (மீண்டும் ) (1582- 1591)

பெரிய‌பிள்ளையின் ஆட்சி மீண்டும் ச‌ங்கிலி ப‌ர‌ராசசேக‌ர‌ன்VII இன் ம‌க‌ன் புவிராச‌ப‌ண்டார‌த்தால் வீழ்த்த‌ப்ப‌ட்ட‌து. ஆனால் அர‌ச‌ன் பெரிய‌பிள்ளையின் மூத்த‌ ம‌க‌ன் அர‌ச‌கேச‌ரியும், இரட்டைய‌ர்க‌ள் எதிர்ம‌ன்ன‌சிங்க‌மும், ச‌ங்கிலிகுமார‌னும் உயிர் த‌ப்பிக் கொண்ட‌ன‌ர்.

 எதிர்ம‌ன்ன‌சிங்க‌ம் (1591- 1615)
 பெரிய‌பிள்ளையின் மூத்த‌ ம‌க‌ன்

ச‌ங்கிலி குமார‌ன் (யாழ்ப்பாண‌த்தின் க‌டைசி அர‌ச‌ன்)  - 1615 - Circa 1621)*********************************************************************************************

NOTE: 
**சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் 'வ‌ன்னிய‌ல‌த்தோக்க‌ளுக்கும், அட‌ங்காப்ப‌ற்றையும்        கிழ‌க்கு மாகாண‌ வ‌ன்னிமைக‌ளையும் ஆண்ட‌ த‌மிழ் வ‌ன்னிய‌ சிற்ற‌ர‌ச‌ர்க‌ளுக்கும் வேறுபாடு உண்டு. அவ‌ர்க‌ளில் த‌மிழ்நாட்டிலிருந்து குடியேறிய‌ வ‌ன்னிய‌ர்க‌ளும் அட‌ங்குவ‌ர். யாழ்ப்பாண‌ அர‌சு வீழ்ந்த‌ பின்பும் வ‌ன்னிய‌ர்க‌ளின் ஆட்சி நிலைத்திருந்த‌து. 
*********************************************************************************

யாழ்ப்பாண‌ அர‌சர்க‌ளின் வாரிசுக‌ளாக‌த் த‌ம்மைக்க‌ருதும், த‌ம‌து வேர்க‌ளை யாழ்ப்பாண‌ அர‌சர்க‌ளிட‌ம் தேடும் பல‌ வெள்ளாள‌க் குடும்ப‌ங்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் இன்றும் உண்டு.  


யாழ்ப்பாண‌ அர‌ச‌ப‌ர‌ம்ப‌ரை என்ற‌ நூலின் சில‌ ப‌குதிக‌ள்.

3 comments:

Kaviyan said...

யாழ்ப்பாண வைபவமாலை நூலில் வேளாள அரசர்களின் குடியேற்றங்களைப் பற்றிக் கூறியது:

“இங்ஙனமிருக்கையில், ஒரு நாள் புவனேகவாகுவுடன் ஆலோசித்து, சிங்கையாரிய மகாராசன் தமிழ்க் குடிகளை அவ்விடம் அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழ் நாட்டரசர்களுக்குத் திருமுகங்கள் எழுதியனுப்பினான். அவ்வரசர்கள் சில குடிகளை அனுப்பி வைக்க, அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்குள் ஐந்து குடிமைகளுடனேயும் வந்த பொன்பற்றியூர் வேளாளன் பாண்டி மழவனையும் தம்பியையும், மைத்துனனாகிய சண்பக மழவனையும் அவன் தம்பியையும், சிங்கையாரிய மகாராசன் திருநெல்வேலியிலே குடியிருத்தினான்; காவிரியூர்ப் புரவலாதிதேவனின் மூத்த குமாரனாகிய நரசிங்கதேவனை மயிலிட்டியிலிருத்தினான்; வாவிநகர் வேளாளன் செண்பகமாப்பாணனையும் அவன் ஞாதியாகிய சந்திரசேகரமாப்பாணனையும் கனகராயர் என்னுஞ் செட்டியையும் தெல்லிப்பழையில் இருத்தினான்; கோவலூரிலிருந்து வந்த பேராயிரமுடையான் என்னும் வேளாளனை இணுவிலில் இருத்தினான். அவ்வூர் திருத்திப்படாததனால் அவன் அவ்விடத்தை விட்டு மேலைக் கிராமத்திற் போயிருந்தான். இராசமுத்திரையும் பல வரிசைகளும் பெற்ற கச்சூர் வேளாளன் நீலகண்டனையும் அவன் தம்பிமார் நாலுபேரையும் பச்சிலைப்பள்ளியிலிருத்தினான். சிகரமாநகர வேளாளன் கனகமழவனையும் அவன் தம்பிமார் நால்வரையும் புலோலியில் இருத்தினான்; கூபகநாட்டு வேளாளன் கூபகார்யேந்திரனையும் புண்ணிய பூபாலனையும் தொல்புரத்தில் இருத்தினான்; புல்லூர் வேளாளன் தேவராயேந்திரனைக் கோயிலாகக் கண்டியில் இருத்தினான்; ஏரெழுபது என்னும் பிரபந்தம் பாடப்பெற்ற உயர்குல வேளாள மரபினனான தொண்டை மண்டலத்து மண்ணொடு கொண்ட முதலி என்பவனை இருபாலை என்னுமூரில் இருத்தினான்; செய்யூர் இருமரபுந் துய்ய தனி நாயகன் என்னும் வேளாளனை நெடுந்தீவில் இருத்தினான்; காஞ்சீபுரத்தில் வந்த பல்லவன் என்னும் பிரபுவையும் இரண்டு துணைப் பிரபுக்களையும் வெளிநாடென்னும் பல்லவராய கட்டில் இருத்தினான்.”

அப்புறம் யாழ்ப்பாண வைபவமாலையைப் பொறுத்த வரை வெள்ளாளர்கள் தமிழகத்திலிருந்து குடியேறினார்களல்லவா?

viyasan said...
This comment has been removed by the author.
viyasan said...

மதுரையிலிருந்து வந்து யாழ்ப்பாண அரசனாக முடிசூடிக்கொண்ட பாண்டிய இளவரசன் தான் தமிழ்நாட்டு வேளாளப் பிரபுக்களை அழைத்து வந்து ஒவ்வொரு கிராமத்துக்கும் தலைவனக்கினான் என்கிறது யாழ்ப்பாண வைபவமாலை. அதன் கருத்து யாஹ்ழ்ப்பானத்தில் அதற்கு முன்பு வெள்ளாளர்கள் வாழவில்லை என்பதல்ல. யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்கள் வாழ்ந்தது தான் வெள்ளாள பிரபுக்களை அழைத்த காரணம். அந்தக்காலத்தில் சாதி முக்கியம். வேறு சாதியை அழைத்து பெரும்பான்மை வெள்ளாளர்களை ஆளவைத்தால் அவர்கள் புரட்சி செய்வார்கள். முற்காலத்தில் குலம், குடும்பம், சாதி எல்லாம் முக்கியம். பிரபுக்கள் குடும்பம் தான் ஆட்சி செய்யலாம். எ:கா: கண்டிச் சிங்கள அரச பரம்பரை போத்துக்கேய கலப்பினால் அவர்கள் தீட்டுப் பட்டுவிட்டார்கள் அல்லது ritual purity ஐ இழந்து விட்டார்கள் என்று மதுரையிலிருந்து தெலுங்கு அரசர்களை அழைத்து கண்டி சிம்மாசனத்தில் இருத்தவில்லையா. யாழ்ப்பாணத்தில் வாழந்த வெள்ளாளர்களுக்கும் தமிழ்நாட்டு வெள்ளாளர்களுக்கும் ஏற்கனவே தொடர்புகள் இருந்திருக்கும். அதனால் தான் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து தமது ஊர்களுக்கு தலைவர்கள் அழைத்து வரப்படுவதை எதிர்க்கவில்லை எனவும் கொள்ளலாம்