Friday, April 12, 2013

மீண்டும் இராமாய‌ண‌ம்? இல‌ங்கையில் இந்திய‌ர்க‌ள்......


யாழ்ப்பாண‌த்திற்கு விஜ‌ய‌ம் மேற்கொண்ட‌ இந்திய‌ப் பாராளுமன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் அட‌ங்கிய‌ குழுவின‌ர், பொது இட‌ங்க‌ளில் சிக‌ர‌ட்டுட‌ன் அநாக‌ரீக‌மாக‌ ந‌ட‌ந்து கொண்ட‌து பொது ம‌க்க‌ள் ம‌த்தியில் க‌டும் எதிர்ப்பினை ஏற்ப‌டுத்தியுள்ளது.

இக்குழுவின‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ நிக‌ழ்வுக‌ளின் போது பாராளுமன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் சில‌ர் கையில் சிக‌ர‌ட்டுட‌ன் வ‌ல‌ம் வ‌ந்த‌ன‌ர். அதே போல் சில‌ர் ஒவ்வொரு இட‌ங்க‌ளிலும் நின்று புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுப்ப‌தில் ம‌ட்டும் ஆர்வ‌ம் கொண்டிருந்த‌ன‌ர்.

இன்ன‌மும் சில‌ உறுப்பின‌ர்க‌ள் யாழ்ப்பாண‌ க‌த‌லி வாழைப்ப‌ழ‌ம் சுவையாக‌ உள்ள‌தாக‌த் தெரிவித்து, கும்ப‌ங்க‌ளில் வைத்திருந்த‌ வாழைப்ப‌ழ‌ங்க‌ளையும் தேடித் தேடி உண்ட‌ன‌ர். இவ‌ர்க‌ளின் இவ்வாறான ந‌ட‌வ‌டிக்கைக‌ள் பொது ம‌க்கள் ம‌த்தியில் மிக‌வும் க‌வ‌லைக்குரிய‌தாகின‌.

த‌மிழ்நாட்டில் ஈழ‌ ஆத‌ர‌வு கொந்த‌ளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ப‌ல‌த்த‌ எதிர்பார்ப்புக்க‌ளுட‌ன் யாழ்ப்பாண‌த்துக்கு வ‌ந்த‌ இக்குழுவின‌ர், ஒரு ந‌கைச்சுவைக் குழுவின‌ர் போல் செயற்ப‌ட்ட‌து ம‌க்க‌ளை ஏமாற்ற‌த்துக்குள்ளாக்கியுள்ள‌து.
 
 
 

பொது இட‌ங்க‌ளில் சிக‌ர‌ட், வாழைப்ப‌ழ‌ம் என‌ அநாக‌ரீக‌மாக‌ ந‌ட‌ந்து கொண்ட‌ இந்திய‌ எம்.பிக்க‌ள் குழுவின‌ர்.
http://www.tamilwin.com/show-RUmryESVNanv2.html

:-)

7 comments:

வவ்வால் said...

வியாசன்,

ஏற்கனவே இந்த செய்தியைப்பார்த்தேன், அப்படியே நீங்களும் எடுத்துப்போட்டாச்சு போல :-))

ஹி...ஹி நாம செஞ்சா நல்லது, அடுத்தவன் செஞ்சா கொப்பி அடிப்பது :-))

FICCI( Federation of Indian Chambers of Commerce and Industry) என்ற தனியார் அமைப்பு தான் இந்த எம்பிக்கள் குழுவை அழைத்து சென்றூ படம் காட்டியுள்ளது,இது அரசு முறைப்பயணமும் அல்ல,என்ற உண்மையை நீங்க தேடிப்பிடிச்சு படிச்ச தளம் சொல்லவில்லையா?

முதலாளிகளுக்காக முதலாளிகளே நடத்தும் அமைப்பு, இப்படி ஒரு கூட்டத்தினை இலங்கை அரசே கூட பின்னால் நின்று நடத்தி இருக்கலாம், இலங்கையிலும் ஒரு ஃபிக்கி இருக்கு.

எனவே வந்தவங்க எல்லாம் இதை ஒரு ஜாலி டூரா தான் எடுத்திருப்பாங்க.

நீங்க தம் அடிச்சதுக்கு எல்லாம் பொங்குறிங்க, போருக்கு பின் விபச்சாரம் அதிகமாகிடுச்சு, என கவலைப்படாமல், விபச்சாரத்தினை அரசு முறைப்படி நடத்தவேண்டும்னு இலங்கை தமிழர்கள் முற்போக்கா பதிவுப்போட்டு கலக்குறாங்க, அப்போ தம் அடிச்சா மட்டும் தப்பா ?

அது சரி, வாழப்பழம் சாப்பிட்டதுக்கு எல்லாமா விசாரணைக்கமிஷன் வைப்பாங்க அவ்வ்!

சரி ஒரு வாழப்பழம் இங்கே இருக்கு இன்னொரு வாழைப்பழம் எங்கே :-))

viyasan said...

//...ஹி நாம செஞ்சா நல்லது, அடுத்தவன் செஞ்சா கொப்பி அடிப்பது//

த‌லைவ‌ரே,

அந்த‌க் கொப்பிக்கும் இந்த‌க் கொப்பிக்குமா வேறுபாடு தெரிய‌வில்லை. இது வெறும் செய்தி தான். ஆனால் நீங்க‌ள் கொப்பிம் அடித்துப் போட்ட‌ விட‌ய‌ம் அதாவ்து 1480ம் ஆண்டுப் புய‌லில் ராமேஸ்வ‌ர‌ம் தீவும், வேறு 11 தீவும் க‌ட‌லுக்குள்ளிருந்து கிழ‌ம்பி மேலே வ‌ந்த‌து என்ப‌து அடி முட்டாள்த‌ன‌ம். அதை வாசித்துக்கூட‌ப் பார்க்காம‌ல் அப்ப‌டியே கொப்பி அடித்துப் போட்ட‌து அதை விட முட்டாள் த‌ன‌ம். இந்த‌பதிவை நான் கூட‌ ந‌கைச்சுவைக்காக‌த் தான் போட்டேன். ஆனால் க‌ச்ச‌தீவு விவாத‌ம் ஒரு ந‌கைச்சுவையான‌ விட‌யம‌ல்ல‌. அத‌ற்கும், இந்த‌ப்ப‌திவுக்கும் கூட‌வா உங்க‌ளுக்கு வேறுபாடு தெரிய‌வில்லை. :-)

வவ்வால் said...

வியாசர்,

//அந்த‌க் கொப்பிக்கும் இந்த‌க் கொப்பிக்குமா வேறுபாடு தெரிய‌வில்லை. இது வெறும் செய்தி தான்.//

என்னா தலைவரே இப்படி காமெடி செய்யுறிங்க, நான் சொன்னது மொத்தப்பதிவில் ஒரு சிறுப்பகுதி, மேலும், இப்படி இருக்கு என்பதை குற்ப்பீட்டே ஆக வேண்டும் என்பதால் சொன்னது. கச்சத்திவூ தளத்தை ரெஃபரென்ஸ் கொடுத்துவிட்டு, அதில் இருப்பதை சொல்லாமல் விட்டால்,நான் மறைத்துவிட்டேன் என்பதாகிவிடும்.

இப்போ நீங்க சொன்னது செய்தி என்கிறீர்கள் ,அப்படி எனில் இந்த எம்பிக்கள் குழு இந்திய அரசால் அனுப்பப்படாத ஒன்று, ஃபிக்கி என்ற வர்த்தக அமைப்பு , இலங்கை அரசின் தூண்டுதலால் செய்த ஏற்பாடு என்ற செய்தியை ஏன் மறைத்தீர்கள்.

நேற்று நடந்த சம்பவத்திலேயே இப்படி திரிச்சுவிட்டா, பல காலம் முன்னர் நடப்பதை எல்லாம் என்ன செய்வீர்கள்,இப்படி செய்தி போட்டது ஒரு தளம் அதை அப்படியே எடுத்துப்போட நீங்கள் ,நல்லா இருக்கு கதை :-))

viyasan said...

//இப்போ நீங்க சொன்னது செய்தி என்கிறீர்கள் ,அப்படி எனில் இந்த எம்பிக்கள் குழு இந்திய அரசால் அனுப்பப்படாத ஒன்று, ஃபிக்கி என்ற வர்த்தக அமைப்பு , இலங்கை அரசின் தூண்டுதலால் செய்த ஏற்பாடு என்ற செய்தியை ஏன் மறைத்தீர்கள்.//

நான் கீழே லிங்கைத் த‌ந்துள்ளேன், நான் ஒன்றையும் ம‌றைக்க‌வுமில்லை, திரிக்க‌வுமில்லை. ஏன் ம‌றைத்தீர்க‌ள் என்று த‌மிழ்வின் இணைய‌த்த‌ள‌த்துக்கு எழுதிக் கேளுமையா. அந்த‌ செய்தியையும் ப‌ட‌ங்க‌ளையும் அப்ப‌டியே ப‌திவு செய்துள்ளேன். இந்த‌ப்ப‌ட‌ங்க‌ளைப் பார்க்கும் போது ஆங்கில‌த்தில் வெளிவ‌ந்த‌ 'The Ugly Indian' க‌ட்டுரைக‌ள் தான் நினைவு க்கு வ‌ந்த‌ன‌, அதாவ‌து ஒரு பாராளுமன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் இன்னொரு நாட்டின் பொது இட‌ங்க‌ளில் போய் அநாக‌ரீக‌மாக‌ ந‌ட‌ந்து கொள்கிறார்க‌ள் அவ்வ‌ள‌வு தான். அவ‌ர்க‌ளின் செய‌ல்க‌ள் ப‌ல‌ராலும் அவ‌தானிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌, ப‌ட‌மெடுக்கிறார்க‌ள் என்ப‌து கூட‌வா அவ‌ர்க‌ளுக்குத் தெரிய‌வில்லை. உங்க‌ளுக்குக் கூட‌ அது புரியவில்லைப் போல் தெரிகிற‌து. :-)

viyasan said...

த‌லைவ‌ரே வெள‌வால்,

1480 ம் ஆண்டுப்புய‌லில் ராமேஸ்வ‌ர‌ம் தீவும் 11 வேறு தீவுக‌ளும் க‌ட‌லிலிருந்து கிழம்பிய‌தாக‌ நீங்க‌ள் செய்த‌ க‌தாகாலட்சேப‌ம் பிழையாகிப் போனது உங்க‌ளின் ம‌ன‌தைப்பாதித்து விட்ட‌து போலிருக்கிற‌து. அத‌ற்காக‌ வ‌ருந்துகிறேன். உங்க‌ளின் ம‌ன‌தைப்புண்ப‌டுத்துவ‌த‌ல்ல‌ என்னுடைய‌ நோக்க‌ம். நாங்க‌ள் எல்லோருமே, நூல்க‌ளில், இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் அல்ல‌து தொலைக்காட்சிகளில் பார்த்த‌வ‌ற்றைத் தான் வ‌லைப்ப‌திவுக‌ளில் ப‌திகின்றோம். ஆனால் நீங்க‌ள் என்ன‌டாவென்றால் ப‌டித்துப்பார்க்காம‌லே அப்ப‌டியே உங்க‌ளின் வ‌லைப்ப‌திவில் ப‌திவு செய்து விட்டீர்க‌ள் என்ப‌தைச் சுட்டிக்காட்டிய‌த‌ற்காக‌, ம‌துரை வீர‌ன் ஸ்ரைலில் என்னை வெட்டுவ‌த‌ற்குத் திரிகிறீர்க‌ள் போலிருக்கிற‌து. உதார‌ண‌மாக‌ க‌ச்ச‌தீவுக்கும், நெடுந்தீவுக்கும், ராமேஸ்வ‌ர‌த்துக்கும் இடையிலான‌ தூர‌த்திலுள்ள‌ முர‌ண்பாட்டை நீங்க‌ள் சுட்டிக் காட்டினீர்க‌ள், அதிலுள்ள‌ த‌வ‌றை ஒப்புக்கொண்டு, உட‌ன‌டியாக‌ நான் திருத்த‌ம் செய்ய‌வில்லையா, ஆனால் நீங்க‌ள் பிழையான‌ த‌க‌வ‌ல் என்று தெரிந்து கொண்டும் திருத்த‌ம் செய்ய‌ மாட்டேன் என்று அட‌ம் பிடிக்கிறீர்கள். உங்க‌ளுக்கு ம‌துரைப் ப‌க்க‌மா? ச‌ரியான‌ ந‌க்கீர‌ன் ப‌ர‌ம்ப‌ரையாக‌ இருப்பீர்க‌ள் போலிருக்கிற‌து. :-)

வவ்வால் said...

வியாசரய்யா,

//நான் கீழே லிங்கைத் த‌ந்துள்ளேன், நான் ஒன்றையும் ம‌றைக்க‌வுமில்லை, திரிக்க‌வுமில்லை. ஏன் ம‌றைத்தீர்க‌ள் என்று த‌மிழ்வின் இணைய‌த்த‌ள‌த்துக்கு எழுதிக் கேளுமையா.//

ஹி...ஹி இதைத்தானே நானும் என் சார்பா சொல்லிப்பார்த்தேன், நீர் என்னமோ நானே கதைவிட்டதா சொன்னீர், அப்புறம் இப்போ படிச்சு பார்க்காமலே நான் எழுதிவிட்டேன் என்கிறீர்.

உண்மையில் நான் நான்கைந்து தளங்களில் இருந்து தகவல்களைப்பெற்று தொகுத்து எழுதியது,படித்து பார்க்காமலா செய்ய முடியும் என்ற அடிப்படைக்கூட புரியவில்லை.

கச்சத்தீவு தமிழகத்துக்கு சொந்தம் என சொன்னது உங்கள் மனதை பாதித்துவிட்டது போலும்,அதனால் தான் பொங்குறீர்கள்,நானும் திருத்தம் செய்கிறேன்,அப்படியெல்லாம் புயலின் போது நடக்கவில்லை என தரவுகள் தாருங்கள் என கேட்டேன் ,தரவேயில்லை.

இப்பொழுதும் சொல்வது இது தான் நீங்கள் மாற்று தரவுகள் அளித்தால் அதற்கேற்ப மாற்றம் செய்துவிடுவேன்.

ஆனால் நீங்கள் சொல்வதோ வியாசனாகிய நான் சொல்கிறேன் ,மாற்று என :-))

//ஆனால் நீங்க‌ள் பிழையான‌ த‌க‌வ‌ல் என்று தெரிந்து கொண்டும் திருத்த‌ம் செய்ய‌ மாட்டேன் என்று அட‌ம் பிடிக்கிறீர்கள்.//

நீங்கள் எதற்கும் அவசரப்படுபவராக இருக்கிறீர், எனது பதிவிலேயே பிழைகள் இருக்கலாம்,சரியான முறையில் சுட்டினால் திருத்தம் செய்வேன் என அறிவிப்பும் செய்துள்ளேன்.

இப்படி எத்தனைப்பேர் வெளிப்படையாக சொல்கிறார்கள். நான் எதிர்ப்பார்ப்பதெல்லாம் பிழை என சொல்லப்படுவதற்கு தரவுகள் தாருங்கள் என்பதே.

அவ்வாறு சரியாக சுட்டிக்காட்டியதை ,பிழைத்திருத்தம் என சொல்லி பதிவில் சேர்த்தும் இருக்கிறேன்.
---------

நீங்கள் தொலைவு குறித்து மாற்றம் கொண்டதற்கு நன்றி பின்னர் அதனைக்கவனிக்கவில்லை,ஆனால் சரியான தொலைவு இன்னும் குழப்பம் தான்,நிறைய இடத்தில் மைல்,நாட்டிக்கல் மைல் குழப்பி இருக்கிறார்கள் என்பதால் மேற்கொண்டு அதனை தொடரவில்லை.

viyasan said...

//நீங்கள் எதற்கும் அவசரப்படுபவராக இருக்கிறீர், எனது பதிவிலேயே பிழைகள் இருக்கலாம்,சரியான முறையில் சுட்டினால் திருத்தம் செய்வேன் என அறிவிப்பும் செய்துள்ளேன்.//

த‌லைவ‌ரே,

அப்ப‌டியானால் ராமேஸ்வர‌ம் 1480 இல் தான் உருவாகிய‌து என்று இன்ன‌மும் நீங்க‌ள் நம்புகிறீர்கள் அல்ல‌து அப்ப‌டியுமிருக்க‌லாம் என்று உங்க‌ளுக்குச் ச‌ந்தேக‌மாக‌ இருக்கிற‌து அல்ல‌து ராமேஸ்வ‌ர‌ம் 1480க்கு முன்பாக‌ உருவாகிய‌ தீவு என்ப‌து உங்க‌ளுக்குத் தெரியாது. இன்னும் பூமி த‌ட்டையான‌தென்று யாரும் ந‌ம்பிக்கொண்டு, பூமி உருண்டையான‌து தான் என்ப‌த‌ற்கு நீ ஆதார‌ம் காட்டு என்று யாராவ‌து கேட்டால், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அவ‌னை மேலும், கீழும் பார்த்து விட்டு, அந்த‌ இட‌த்தை ந‌க‌ல்வார்க‌ளே த‌விர‌, த‌ம‌து நேர‌த்தை வீணாக்கி அவ‌னுக்கு விளக்க‌ முய‌ல‌ மாட்டார்க‌ள். அது போல் தான் இதுவும். :)