Tuesday, April 2, 2013

சிங்களவர்கள் திராவிடக் கலப்பினமே தவிர ஆரியர்களல்ல.


 

இந்தியாவிலுள்ளஇலங்கைத் தூதர் காரிய‌வாச‌ம் சிங்கர்கள் இந்தியர்கள்/ஆரியர்கள் என்று குறிப்பிட்டநாளிலிருந்து,சிங்க‌ள‌ இன‌த்தின் வ‌ர‌லாற்றைப் ப‌ற்றி த‌மிழ‌ர்க‌ள் அதிக‌ள‌வில் பேசிக்கொள்கிறார்க‌ள்.  சிங்களர்கள் ஆரியர்களுமல்ல, மிழர்களுமல்லஅவர்கள் திராவிடக் ப்பினத்தர்கள்

திராவிட‌ அர‌சிய‌லால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பார்ப்ப‌ன‌ர்க‌ளினதும், த‌மிழ்நாட்டை, த‌மிழ‌ர்க‌ளை வெறுக்கும் இந்திய‌ர்க‌ள், அதிலும் வ‌ட‌ இந்திய‌ர்க‌ளினதும் ஆத‌ர‌வைத் திர‌ட்டுவ‌த‌ற்கும், இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளை த‌ம‌து க‌ட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்  ப‌ல‌ம்வாய்ந்த‌ பார்ப்ப‌ன‌ர்க‌ளைத் திருப்திப்ப‌டுத்த‌வும்,  த‌மிழ‌ர்க‌ள் எதிர்ப்பு பிர‌ச்சார‌த் தேவைக்கும் ம‌ட்டும் தான், தாம் இந்தியாவிலிருந்து வந்த‌தாக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் சில‌ர் கூறிக் கொள்வார்க‌ளே த‌விர, இல‌ங்கையில் சிங்கர்கள் எவரும் ம்மை இந்தியாவில் இருந்து ந்ததாகக் கூறுவதுமில்லை, அப்ப‌டியான‌ க‌ருத்துக்க‌ளை விரும்புவதுமில்லை, இந்தியாவிலோ அல்லது இந்தியர்களிடமோ அவர்களுக்கு எந்தவிசுவாசமும் கிடையாது. 

யூதர்களும் அரபுக்களும் ஆபிரகாமின் குழந்தைகள், அவ‌ர‌து ‌வழிவ‌ந்த‌வ‌ர்க‌ள்  என்பற்காகஅரபுக்கள் எவரும் யூதர்களின்   பஸ்தீனியர்களுக்கெதிரான கொடுமைகளை எதிர்க்காமல் இருப்பதில்லை,அது போல் சிங்கர்களும் ஆரியர்கல்ல, திராவிடக்கலப்பினம் என்றஉண்மையைப் பேசுவதால்,திராவிடர்களெல்லோரும் சிங்கர்கள் மிழர்களுக்கு இழைக்கும் கொடுமைகளுக்காகஅவர்களை எதிர்க்காமல்,ஆதரிக்கவேண்டுமென்றஅவசியமுமில்லை

இதில் வேடிக்கை என்னவென்றால் இன்று சிங்கர்கள் ஆரியர்கள் எனவாதாடும் இலங்கைத் தூதர் காரியவாசத்தின் முன்னோர்கள் கூடத் மிழர்கள் தான்.

சிங்களவர்களே தாம் ஆரியர்களல்ல என வாதாடத்தொடங்கிய பின்னரும், சில  தமிழர்கள் இல்லை அவர்கள் ஆரியர்கள் தான் என அடம்பிடிப்பது கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக இருப்பதால், உண்மையில் சிங்களவர்கள் ஆரியர்களா அல்லதொரு திராவிடக் கலப்பினமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

சிங்களவர்கள் ஆரியர்கள், அவ‌ர்க‌ள்  வட இந்தியாவிலிருந்து 700 நண்பர்களுடன் இலங்கையை வந்தடைந்த விஜயனின் பரம்பரையினர், அவன் தான் சிங்கள இனத்தின் முன்னோடி என்றும், வங்காளதேசத்திலே சிங்கபுரத்திலே, ஒரு சிங்கத்துக்கும், அந்த நாட்டின் இளவரசிக்கும் பிறந்த சிங்கவாகுவின் பரம்பரையில் வந்தவனே விஜயன் எனவும் மகாவம்சத்திலேயுள்ள, நம்பமுடியாத கதைகளையெல்லாம் சொல்லி வந்த சிங்களவர்கள் அவற்றையெல்லாம் இப்பொழுது முணுமுணுப்பது கூட இல்லை. ஏனென்றால் விஜயனின் வருகை உண்மையான சம்பவம் என ஒப்புக்கொண்டால் சிங்களவர்கள் இலங்கையின் வந்தேறு குடிகள், அதாவது கள்ளத்தோணிகள் என்றாகி விடுகிறது

கள்ளத்தோணியில் வந்திறங்கி விட்டு, இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் நாங்கள் தான் என தமிழர்களுடன், அதிலும் தாங்களே இலங்கையின் பூர்வீக குடிகள், இது எமது பாரம்பரிய பூமி என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், முப்பது வருடங்களுக்கு மேல் சிங்களவர்களை இலங்கையின் வடகரையை மிதிக்க விடாமல் தடுத்த தமிழர்களுடன் வாதாடி வெல்ல முடியாததையுணர்ந்த சிங்களவர்கள்,  தாம் விஜயன் வழியில் வந்தவர்களல்ல அது வெறும் கட்டுக்கதை, சிங்கள இனத்தின் உண்மையான முன்னோர்கள், சரித்திரகாலத்துக்கு முற்பட்ட  இயக்கர், நாகர், இராட்சதர் என அழைக்கப்படும் பூர்வீக குடியினர்கள், அவர்கள் பேசிய எலு (Hela- தமிழ்மொழியின் முன்னோடி) மொழியிலிருந்து தான் சிங்கள இனம் உருவானதென இன்று வாதாடுகிறார்கள் 

இந்த இயக்கர், நாகர், இராட்சதர் (Raksha) எல்லோரும் ஆரியர்களல்ல, திராவிடர்கள் என்பதை யாவருமறிவர். இலங்கைத் தீவின் பூர்வீககுடிகளாகியஇயக்கர், நாகர்களின் ழித்தோன்றல்கள் தான் பூர்வீக ஈழத்தமிழர்கள் என்பது இலங்கைத் மிழர்களின் ருத்தாகும்.  அத்துடன் வங்காளத்திலிருந்து வந்த விஜயன் ஆரியனாக இருக்க முடியாது ஏனென்றால் வங்காளிகள் ஆரியர்களல்ல, மங்கோலிய - திராவிடர்கள் (Mongoloid Dravidians) என்ற உண்மை மகாவம்சத்தை எழுதிய புத்த பிக்கு காநாமாவுக்கு ட்டுமல்லஇலங்கைத் தூதர் காரியவாசத்துக்கும் தெரியவில்லை., ஆனால் இன்றைய சிங்களவர்களுக்குத் தெரியும், அதனால் விஜயனின் கதையினடிப்படையில் தம்மை ஆரியர்களென அழைத்து தம்மை  வந்தேறுகுடிகளாக்கிக் கொள்ள சிங்களவர்கள் இனிமேலும் தயாராகவில்லை.

யாழ்ப்பாண‌த்தில் இராவ‌ண‌ன்
நினைவாக‌ திருவிழா

மேலும் இந்தியாவில் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டு வெறுக்கப்படும் இராவணனைச் சொந்தம் கொண்டாடி தமிழர்களும், சிங்களவர்களும் ஆளுக்காள் அடிபட்டுக் கொள்வது இலங்கையின் இணையத்தளங்களில்  வழக்கமாக நடைபெறுவதொன்றாகும். ஈழத்தமிழர்கள் இராவணன் சைவசமயத்தவன், அவன் ஒரு தமிழன் என்றால்,  இல்லையில்லை, இராவணன் ஒரு சிங்களவன், ஹேல(எலு) மொழியைப் பேசியவன். சிங்களம் பெயர் வந்ததே சிவ + ஹேல = சிங்கேலா என்றெல்லாம் கதை விடுகிறார்கள். ஆக மொத்தத்தில் சிங்களவர்கள், அதிலும் படித்த சிங்களவர்களும்,  ஈழத்தில் தமிழ் மண்  முழுவதையும் ஆக்கிரமிக்க நினைக்கும், வரலாற்றைத் திரிக்கும், தமிழர் நிலமெல்லாம் புத்தர்சிலையை நாட்டும் பெளத்த பிக்குகளும் தம்மை ஆரியர் என்று இப்பொழுதெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. இவ்வளவு காலமும் தம்மை ஆரியர்கள் என்றவர்கள் இப்பொழுது தாம் இயக்கர், நாகர், இராட்சதர் போன்ற திராவிடப் பூர்வீக குடிகளின் வாரிசுகள் என்று வாதாடுகிறார்க‌ள்.


மகாவம்சம் - சிங்கள அரசியல் பெளத்தத்தின் ஆணிவேர்

 

 எவ்வாறு ராஜ ராஜ சோழன் சோழநாட்டில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தஞ்சைப் பெருவுடையார் கோயிற் சுவரில் பொறித்து வைத்தானோ, அதே  போன்று, அனுராதபுரத்திலிருந்த மகாவிகாரையிலிருந்த, சைவசமயிகளாகிய தமிழர்களை வெறுத்த சிங்களபுத்த  பிக்குகளால் இலங்கையில்  நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களை ஒலைச்சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டது தான் மகாவம்சம்

ராஜ ராஜ சோழனின் கல்வெட்டுக்கள் வரலாற்றைக் குறிப்பிட எழுதப்பட்டவை ஆனால் மகாவம்சம் ஒரு புத்தசமய நூல்.  புத்தசமயத்தையும், புத்தபிக்குகளையும், புத்த பிக்குகளை ஆதரிப்பவர்களையும் புகழ்ந்து புத்த பிக்குகளால் எழுதப்பட்ட ஒலைச்சுவடிகள். அத்துடன் பேய்கள், பூதங்கள், புத்தர் கனவில் வருதல், வரம் கொடுத்தல், மகிந்த தேரோவும் ஐந்து புத்த பிக்குகளும் ஒரு உதவியாளரும் பறந்து வந்து அனுராதபுரத்திலுள்ள செங்குத்தான குன்றில் இறங்கியது போன்ற நம்பமுடியாத சம்பவங்களையும் கூறும் புத்தபுராணம் அது.


இல‌ங்கைக்கு புத்த‌ச‌ம‌ய‌த்தின் வ‌ருகை


அது சரி, பிக்குகள் எல்லாம் தங்களின் தெய்வீக சக்தியால் பறந்து வந்தார்கள் அந்த உதவியாளர் எப்படிப்பறந்து வந்தார் என்று கேட்டால் சிங்களவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும்,  அதை விட மகாவிஷ்ணு புத்தருக்கு ஏவல் செய்பவர் ( சிங்கள பெளத்தத்தில் இந்து மதக்கடவுள்கள் எல்லோரும் புத்தருக்கு வேலைக்கார்கள்) என்றும் கூறுகிறது சிங்கள மகாவம்சம். அது இந்தியாவிலுள்ள இந்துத்துவாக்களுக்குத் தெரியாது போலிருக்கிறது, இப்படியான இந்து மதக்கலப்புள்ள, புத்தரின் போதனைகளுக்கெதிரான பல மந்திர தந்திரங்கள், மாயா ஜால‌ங்க‌ள் எல்லாவற்றையும் இட்டுக்கட்டி எழுதிய அலாவுதீனும் அற்புத விளக்கும், பறக்கும் ஜமுக்காளம் போன்ற கதைகளின் தொகுப்பு தான் மகாவம்சம். அதில் குறிப்பிட்டுள்ள அரசர்களின் பெயர்கள், காலம் என்பன இலங்கையின் வரலாற்றை அறிய உதவினாலும் கூட அதை ஒரு வரலாற்று அடையாளமாக, அல்லது முற்றுமுழுதாக ஒரு சரித்திரத்தைக் கூறும் வரலாற்று நூலாக  கருத்தில் கொள்ள முடியாது. அதன் முதல் அத்தியாயத்தில் குறிப்பிடப்படும் கதை தான் வங்காளத்திலிருந்து  விஜயனின் வருகையும், சிங்கள இனத்தின் தொடக்கமும். அதாவது விஜயனின் வருகையிலிருந்து ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட மகாவம்சத்தில் எதற்காக அப்படி ஒரு வட இந்தியனின் கதை புகுத்தப்பட்டதற்கும், ஏன் மகாவம்சம் முழுவதும் தமிழர்களுக்கு எதிராகவேயுள்ளதென்பதற்கும் காரணங்கள் உண்டு. அக்காலப் பெளத்த பிக்குகளே ஏனிவ்வளவு தமிழெதிர்ப்பு வெறி கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதைப் பார்ப்போம்.


தமிழகத்தில் புத்தமதத்தின் எழுச்சியும் - வீழ்ச்சியும் சிங்களவர்களுக்கு முன்பாகவே பெளத்த மதத்தை அதாவது சாக்கிய முனி புத்தரின் போதனைகளை அவரது சீடர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றவர்கள் தமிழகத் தமிழர்கள். தமிழ்நாட்டில் புத்தமதம் செழித்தோங்கியிருந்த்து  என்பதை, இன்று தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளிலெல்லாம் தேடுவாரற்றுக் கிடக்கும் புத்தர் சிலைகள் மட்டுமல்ல, உலகப்புகழ் பெற்ற பெளத்த ஆராய்ச்சியாளர் பேராசிரியர்  கலாநிதி ஹிக்கொசாக்கா(Dr. Hikosaka) போன்றவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள். அது மட்டுமன்றி பெளத்தம் தமிழ்நாட்டிலிருந்து நாகப்பட்டணம் வழியாக படகில் தான் இலங்கையை அடைந்ததே தவிர மகிந்த தேரோ வட இந்தியாவிலிருந்து பறந்து போய் அனுராதபுரத்திலுள்ள குன்றில் இறங்கவில்லை அதெல்லாம் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்குமிருந்த தொடர்பை மறைக்க சிங்களப் புத்த பிக்குகள் இயற்றிய கட்டுக்கதை என்கிறார்.

புத்தகோசர், புத்ததத்தர், தம்மபாலர்  போன்ற பல புகழ்பெற்ற தமிழ் புத்த துறவிகள் காஞ்சிபுரத்திலிருந்து அனுராதபுரம் மகாவிகாரைக்குச் சென்று புத்தசமயத்தைப் பரப்பியது மட்டுமல்ல, பல பெளத்த நூல்களைப் பாளி மொழியிலிருந்து மொழிபெயர்த்ததுட‌ன் , தாமும் எழுதியுமுள்ளனர். அதுவும் அங்கிருந்த, மகாவம்சத்தை எழுதிய இலங்கைப் பெளத்த பிக்குகளுக்கு தமிழர்கள் மீது எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். அதை விட தமிழகத்தில் பக்திக்காலம் , அதாவது நாயன்மார்களின் காலத்தில் சைவத்தின் எழுச்சியின் காரணமாகப் பல மன்னர்கள் புத்தசமயத்தை விட்டு சைவசமயத்துக்கு மீண்டனர், அதனால் சமணர்களைப் போன்று பெளத்தர்களும் துன்புறுத்தப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சமணர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டனர், பல த‌மிழ்ப்பெளத்தர்கள் இலங்கைக்குத் தப்பியோடி, அங்கிருந்த பெளத்தர்களுடன் இணைந்து சிங்களவர்களாக மாறி, சைவத்தமிழர்களின் மீதிருந்த காழ்ப்புணர்வை மகாவம்சத்தில் வெளிக்காட்டினர்.  இலங்கையின் வரலாற்றில் பெரும்பாலான அரசர்களும், அரசிகளும் தமிழர்கள் அல்லது தமிழ் இரத்தக் கலப்புடையவர்கள். அவற்றையெல்லாம் மறைத்து தமிழரசர்களை நாடு பிடிக்க வந்தவர்களாகவும், வணிகர்களாகவும் காட்ட சிங்கள பெளத்தம் எந்தளவுக்கு முயன்றிருக்கிறதென்பதை மகாவம்சத்தை படித்தவர்களுக்குப் புரியும். இருந்தாலும் சில  வரலாற்று உண்மைகளையும் மகாவம்சம் கூறுகிறது என்பதை மறுக்க முடியாது.


தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமுள்ள பூர்வீக தொடர்பு

 

சிங்களவர்களின் கருத்து என்னவென்றால் இலங்கையில் மட்டும் தான் சிங்களவர்கள் வாழ்கின்றனர், அதை விட்டால் எங்களுக்குப் போக இடமில்லை, முழு இல‌ங்கையையும் ந‌ம்முடைய‌தாக்க‌  ஒரே வழி தமிழர்களை வந்தேறு குடிகளாக்குவது தான். தமது பாரம்பரிய நிலமெனத் தமிழர்கள் நினைக்கின்ற வடக்கையும், கிழக்கையும் சிங்களவர்களுடையதாக்க வேண்டுமானால் அரச உதவியுடன் வரலாற்றைத் திரிக்க வேண்டும், மகாவம்சம் எப்படித் தமிழர்களையும் பெளத்த சமயத்தாரல்லாதாரையும் வில்லன்களாகக் காட்டினாலும், மகாவம்சத்தை மேற்கோள் காட்டியே இலங்கையில் தமிழர்களின் தொன்மையையும் நிரூபிக்க முடியும். அதனால் மகாவம்சத்திலுள்ள கதைகள் சம்பவங்கள் எல்லாவற்றையும் உண்மையானதாகச் சிங்களவர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தம்முடைய தமிழர்களின் நிலத்தைப் பறிக்கும் திட்டத்துக்கு எந்தக் கதைகளும் சம்பவங்களும் உதவுகிறதோ அவற்றை மட்டும் தான் ஏற்றுக் கொள்வார்கள். சிங்களவர்களுடன் இலங்கையின் வரலாற்றைப் பற்றி வாதாடும் போது, அவர்களின் இப்படியான அடாவடித்தனத்தையும் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

மகாவம்சத்தில் விஜயன் என்ற இளவரசன் வங்காளத்திலிருந்து வந்து இலங்கையையாண்ட குவேனியென்ற பூர்வீகக் குடிகளின் தலைவியை மயக்கி, அவளை மணந்து நாட்டைக் கைப்பற்றினாலும், பின்னால் அவளையும் குழந்தைகளையும் காட்டுக்குத் துரத்தி விட்டு, மதுரையிலுள்ள பாண்டிய அரசனுக்குத் தூதனுப்பி பாண்டிய இளவரசியை மணந்து கொண்டதாகவும், பாண்டிய மன்னன் தனது மகளுடன், விஜயனின் 700 தோழர்களுக்கும் 700 தமிழ்ப்பெண்களையும், அவர்களுக்குச் சேவைசெய்ய கலைஞர்கள், தொழிலாளர்கள் எனப் பலரையும் இலங்கைக்கு அனுப்பியதாகக் கூறுகிறது

இந்தக் கதையின் படி பார்த்தால் கூட, சிங்கள இனத்தின் தாய் வழி தமிழினமாகிறது. அதைச் சீரணிக்க முடியாமையும்  இன்றைய சிங்களவர்கள் மகாவம்சத்திலுள்ள விஜயனின் கதை கட்டுக்கதை என்பதற்கொரு காரணமுமாகும். அதே வேளையில் மகாவம்சத்திலுள்ள விஜயனின் கதையைத் தவிர சிங்களவர்கள் ஆரியர்கள் அவர்கள் முன்னோர்கள் வடக்கிலிருந்து இலங்கைக்கு வந்தார்கள் என்பதற்கு எந்த விதமான சரித்திர பூர்வமான ஆதாரங்களும் கிடையாது ஆனால் சிங்களவர்கள் திராவிடர்கள் அல்லது அவர்கள் ஒரு திராவிடக்கலப்பினமென்பதற்கு நிறைய ஆதாரங்களுண்டு.


“While these kingdoms, the Chera, the Chola and the Pandyan kingdoms, had established themselves on both sides of the Indian peninsula, including even distant Java and Timor and the Philippines, it was only (according to Dr. Mendis) where Ceylon was concerned, which they called Ilam, that they failed to occupy it, presumably because, I suppose, they wanted it reserved for Vijaya and his 700 followers from ‘beyond the Ganges’. Who would believe this very unlikely cock and bull story?”


இலங்கையின் இரண்டாயிரமாண்டுக்கும் மேலான வரலாற்றிலே இலங்கையின் எந்தவொரு அரசனும், சிங்கள அரசனோ, தமிழரசனோ தம்மை ஆரியர்கள் என அழைத்ததில்லை ஆனால் பிற்கால யாழ்ப்பாணத்தரசர்கள் மட்டும் தம்மை ஆரியச்சக்கரவர்த்திகள் என் அழைத்தனர். யாழ்ப்பாணத்தரசர்களிலும் எவருமே ஆரியர்களில்லை

இங்கு ஆரியச்சக்கரவர்த்திகள் என்பது அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயரே தவிர அவர்கள் வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள் என்பதல்ல. இங்கு ஆரியர் என்ற பதம் தமிழில் 'உயர்ந்த' (Noble) என்ற கருத்தை  மட்டும் தான் குறிக்கிறதே தவிர அவர்களின் இனத்தையோ அல்லது அவர்களின் பூர்வீகத்தையல்ல.

 


அநகாரிக தர்மபாலாவும் சிங்களவர்களின் ஆரியமயமாக்கலும்எதற்காகச் சில சிங்களவர்கள் தம்மை ஆரியர்கள் என அழைக்க ஆசைப்பட்டார்கள். இதற்குப் பதிலை சமக்கிருதமயமாக்கல் அல்லது ஆங்கிலத்தில் Sanskritization இனால் விளக்க முடியும். அதாவது சமுதாயத்தின் அடிமட்டத்திலுள்ள சாதியினர் அல்லது குழுவினர் தம்மை மேல்சாதியினராக அல்லது மேல்மட்டத்தினராகக் காட்டுவதற்காக, தம்மை உயர்த்துவதற்காக, உயர்ந்த சாதியினரின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்தல். அல்லது தமது சாதியினரை ஏதாவது புராணக்கதைகளுட‌ன் தொடர்பு படுத்தி, தமது மூதாதையர் அந்தப்புராண காலக் கடவுளின் பரம்பரையினர் எனப் புருடா விடுதல். இதை அனேகமாக எல்லாச் சூத்திரர்களும் செய்வதை இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் காணலாம்.(உதாரணமாக வன்னிய குல‌ஷத்திரியர், தேவேந்திர குல‌ ஷத்திரியர் என்பன) அதைத் தான் சிங்களவர்களும் செய்தனர். அந்தக் கால கட்டத்தில், ஆரிய - திராவிடக் கதைகளை அவிழ்த்து விட்ட வெள்ளைக்காரர்களோடு கூட்டுச் சேர்ந்து ஆரியராக ஆசைப்பட்டவர்களில் ஒருவர் மீனவர் குடும்பத்தில் பிறந்த டொன் டேவிட் ஹேவ‌வித்தார‌ண‌ (Don David Hewavitarane) அல்ல‌து அனகாரிக தர்மபாலா.

File:Srimath Anagarika Dharmapala (1864-1933).jpg
அனகாரிக தர்மபாலா - தனியொருவனாக இரண்டாயிரமாண்டுகளுக்கும் மேலாக‌ இலங்கையில் இனங்களுக்கிடையே நில‌விய‌ நல்லுணர்வையும் சமாதானத்தையும் கெடுத்த சிங்களவன்.

சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற எண்ணக் கருத்தைச் சிங்களக் கிராமங்களின் பட்டி தொட்டிகளிலெல்லாம் போய் பரப்பி இலங்கையில் சிங்களவர்களுக்கு இனவெறியையூட்டிய பெருமை இவரைத் தான் சாரும்.  இவர், அமெரிக்க நாசி ஒல்கொட், அன்னிபெசண்ட் மற்றும் சில தமிழ்நாட்டின் சாதிவெறி பிடித்த  பார்ப்பனர்களாலும் ஆரம்பிக்கப்பட்ட தியோசாபிகல் (பிரம்மஞான சபையின் ( குழும உறுப்பினர். அக்காலத்தில்  ஆரிய கொள்கையின் அடிப்படையில் ஹிட்லரையும் ஆதரித்தவர்கள் இவர்கள். இந்த ஒல்கொட் தான் இலங்கையின் பெளத்தத்தின் மறுமலர்ச்சிக்கு அடிகோலியவர் என சிங்களவர்களால் போற்றப்படுபவர். அவர்களுடன் கூட்டுச் சேர்ந்த சிங்களவராகிய தர்மபாலா சிங்களவர்களும் ஆரியர்கள், சிங்கள மொழி ஆரியமொழி அதாவது இந்தோ- ஐரோப்பிய மொழி அதனால் தமிழை விட உயர்ந்தது, சிங்களவரக்ள் ஆரியர்கள், அவர்கள் திராவிடர்களாகிய தமிழர்களை விட உயர்ந்தவர்கள் என்ற கருத்தை சிங்களவர்கள் மனதில் பரப்பி, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் வெறுப்பையும், வேற்றுமையையும் வளர்த்தவர்.  

அது மட்டுமல்ல, அவர் தமிழர்களை விட முகமதியர்களைக் கூடுதலாக வெறுத்தார். முஸ்லீம்கள் இலங்கையின் மண்னின் மைந்தர்கள் அல்ல, அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள், அவர்கள் சிங்களவர்களுக்கு மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும் அன்னியர்கள். சிங்களவர்கள் உயர்ந்த ஆரிய இனத்திலிருந்து வந்தவர்கள் முகம்மதியர்கள் அரேபியாவில் தான் தன்னுடைய முன்னோர்களைத் தேடுவார்கள்/  பிரித்தானியர்களுக்கு எவ்வாறு ஜேர்மானியர்கள் எதிரிகளோ அவ்வாறே சிங்களவர்களுக்கு முகம்மதியர்கள் எதிரிகள்.  இஸ்லாம் என்ற இந்த அழிவு வந்திராது விட்டால் இன்று கந்தகாரிலும், ஆப்கானிஸ்தானிலும் காபூல் பள்ளத்தாக்கிலும், புத்தமதம் தான் கோலோச்சிக் கொண்டிருக்கும். என்று முகம்மதியர் மீதும் வெறுப்பை வளர்த்த அனகாரிக தர்மபாலா தான் இன்றும் சிங்களவர்களால் போற்றிப் புகழப்படும் தேசியத்தலைவர்களில் ஒருவர்.

சிங்களவர்களில் சிலர் போத்துக்கேயர்களின் கலப்பால் கொஞ்சம் மாநிறமாக இருப்பதுண்டு. அதனால் அதை உதாரணமாகக் காட்டி, மேல்நாட்டவர்களுக்கு  சிங்களவர்கள் ஆரியர்கள், வெள்ளை நிறமானவர்கள், தமிழர்கள்- திராவிடர்கள் கறுப்பு நிறமானவரகள் என்று இலங்கை வெளிவிவகார, அமைச்சு பல வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களுக்குப் பல ஆண்டுகளாக கூறி வந்தார்களாம். எல்லா வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கும் இந்தச் செய்தி மறக்காமல் கொடுக்கப்பட்டதாகவும் தமிழராகிய கதிர்காமர் வெளிநாட்டமைச்சராகவும், சந்திரிகா பண்டாரநாயக்கா ஜனாதிபதியானதும் அதை உடனடியாக நிறுத்தி விட்டார்களாம், ஏனென்றால் இரண்டு பேருமே நிறத்தில், அண்ணன், தங்கை போலிருப்பார்கள். 

அனகாரிக தர்மபால வெள்ளையர்களுடனும் ஆரியப்பிராமணர்களுடனும் தனது நட்பைத் தொடரவும், புத்தமதத்தைப் பரப்பவும் சிங்களவர்களும் ஆரியர்கள் என்று வாதாடினார் அதே காரணத்துக்காகத் தான் ஜே ஆர் ஜெயவர்த்தனா போன்ற சிங்களத் தலைவர்களும் இந்தியாவின் தலைவர்களுக்கு சிங்களவர்கள் ஆரியர்கள் என்று படம் காட்டினார்கள். அதையே இன்று காரிய‌வாச‌மும் செய்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பெரியாரின் பார்ப்பனர்களுக்கெதிரான திராவிடப் போராட்டத்தின் தொடர்ச்சியென நினைத்த இந்தியாவின் பலம் வாய்ந்த பார்ப்பனர்களும், சிங்களவர்களும் தம்மைப்போல் ஆரியர்கள் என நம்பி சிங்களவர்களுக்கு ஆதரவளித்து இந்தியாவின் திராவிடர்கள் மீதிருந்த ஆத்திரத்தை ஈழத்தமிழர்கள் மீது தீர்த்துக் கொண்டார்கள். .

உண்மை என்ன‌வென்றால் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ஆரிய‌ர்க‌ள‌ல்ல‌, அவ‌ர்க‌ள் ப‌ல்லின‌க் க‌ல‌ப்பு கொண்ட‌வ‌ர்க‌ள், அதிலும் குறிப்பாக‌ திராவிட‌க் க‌ல‌ப்பின‌ம். அவ‌ர்க‌ள் த‌ம‌து த‌மிழ்-- ‍திராவிட‌ அடையாள‌த்தை ம‌ட்டும‌ல்ல‌, த‌மிழ‌ர்க‌ளையே வெறுக்கிறார்க‌ள். த‌மிழ‌ர்களிட‌மிருந்து க‌லை, க‌லாச்சார‌ம், த‌மிழ்சொற்க‌ள், இல‌க்க‌ண‌ம், என்ப‌வ‌ற்றை இர‌வ‌ல் வாங்கியிருந்தாலும் அவ‌ற்றில் சில‌ மாறுபாடுக‌ளைச் செய்து கொண்டு த‌மிழ‌ர்க‌ள் தான் அவ‌ற்றையெல்லாம் அவ‌ர்க‌ளிட‌மிருந்து இர‌வ‌ல் வாங்கிய‌தாக‌ த‌ம்ப‌ட்ட‌ம் அடித்துக் கொண்டு த‌மிழ‌ர்க‌ளுக்கும், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்குமுள்ள‌ பார‌ம்ப‌ரிய‌ தொட‌ர்பை திட்ட‌மிட்டு ம‌றுக்கிறார்க‌ள். சிங்ள‌ பெள‌த்த‌ பிக்குக‌ள் த‌மிழ்க்க‌லாச்சார‌ப் பார‌ம்ப‌ரிய‌ங்க‌ளை, வ‌ர‌லாற்று விழுமிய‌ங்க‌ளை அழிக்கிறார்க‌ள், இல‌ங்கையில் த‌மிழ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றையே அர‌ச‌ உத‌வியுட‌ன் திரிக்கிறார்க‌ள்.   இத்த‌னை பார‌ம்ப‌ரிய‌ தொட‌ர்புக‌ளிருந்தும் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழின‌த்தை இல‌ங்கையில் அழித்தொழிக்க‌ முய‌ல்கிறார்க‌ள் என்ப‌தை த‌மிழ‌ர்க‌ள் ம‌ற‌ந்து விட‌க் கூடாது.12 comments:

Anonymous said...

மிக அருமையான பதிவு, நான் நினைத்த பலவற்றை தாங்கள் எழுதி ஸ்கோர் செய்துவிட்டீர்கள். :)

viyasan said...

ந‌ன்றி ச‌கோ. இக்பால் செல்வ‌ன்.

குட்டிபிசாசு said...

அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.

நந்தவனத்தான் said...

நல்ல தொகுப்பு. நன்றி.

viyasan said...

சகோத‌ர‌ர் குட்டிப்பிசாசுக்கும் ந‌ந்த‌வ‌னத்தானுக்கும் ம‌ன‌மார்ந்த‌ நன்றிக‌ள்.

Anonymous said...

தமிழர்களும் கலப்பினமே, முழுத் திராவிடர்கள் இல்லை என ஒருக் கட்டுரைத் தீட்டலாம் என்று தோன்றுகின்றது.என் மேல் பாய வேண்டாம், அது தான் உண்மையும் கூட. :)

இலங்கையின் சிங்களவர், தமிழர், முஸ்லிம் அனைவரும் கிட்டத்தட்ட நெருங்கியவர்களே. இலங்கைத் தமிழரின் மரபணுக்கள் தமிழகத் தமிழரை விடவும் சிங்களவரோடு நெருங்கியது.

சிங்களவரின் மரபணுக்களோ வங்காளிகளை விட தென்னிந்தியர்களோடு நெருங்கியது.

வங்காளிகளின் மரபணுக்களோ ஆரியர்களை விட தென்னிந்தியர்களோடு நெருங்கியது.

எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு தான், ஆனால் வெறும் மாயக் கட்டமைப்புகளால், புனைவுகளால் கதையளந்து மக்களைக் கொன்று களைகின்றார்கள்.. என்ன செய்ய..

உங்களைப் போன்றோராவது துணிந்து உண்மையை உடைத்தீர்களே. வாழ்த்துக்கள்.

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
அருமையான பதிவு,
அறியாத பல விடயங்களைக் கூறினீர்கள். இந்த கருத்தாக்கம் சிங்கள மக்களிடையே அறியப்பட்டால், இலங்கைப் பிரச்சினை என்பது இல்லாமல் போகும்.

தேரவாத பவுத்தம், வஹாபியம் போல் பிறரை ஒடுக்கும் சித்தாந்தம் என்பது நம் கருத்து. அது ஏன் என்பதை உங்கள் பத்வில் இருந்து புரிய முடியும்.

கடந்த 100 வருடங்களில் சிங்கள் ஆளும் வர்க்கம்தான் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்பதே உண்மை.பாண்டிய மன்னர்கள்,சிங்களருடன் மன உறவை பேணி வந்தனர்.சிங்கள்ப் படையில் கூட பாண்டியனுக்கு உதவ தமிழகம் வந்ததையும்,அப்படையில் கூட ஈழத் தமிழர்கள் இருந்ததையும் சோழ நிலா நாவலில் மு.மேத்தா எழுதி இருக்கிறார்.

ஈழத் தமிழர்கள்& சிங்களர்கள்&இந்திய தமிழர்கள் மரபணு அடிப்படையிலும் நெருங்கியவர்கள் எனவே ஆய்வுகள் கூறுகின்றன.

http://en.wikipedia.org/wiki/Genetic_studies_on_Sri_Lankan_Tamils

According to a genetic admixture study by Dr. Gautam K. Kshatriya in 1995, the Sri Lankan Tamil are closely related to the Sinhalese who are closely related to Indian Tamils. Kshatriya found the Sri Lankan Tamils to have a greater contribution from the Sinhalese of Sri Lanka (55.20% +/- 9.47) while the Sinhalese had the greatest contribution from South Indian Tamils (69.86% +/- 0.61), followed by Bengalis from the Northeast India (25.41% +/- 0.51). With both the Sri Lankan Tamils and Sinhalese in the island sharing a common gene pool of 55%. They are farthest from the indigenous Veddahs.[1] This close relationship between the Sri Lankan Tamils and Sinhalese makes sense, as the two populations have been in close proximity to each other historically, linguistically, and culturally for over 2000 years.[1]

சிங்கள சாதி அடுக்கும்,ஈழ தமிழர் சாதி அமைப்பும் ஒரே மாதிரி இருக்கும் என் கேள்விப் பட்டு இருக்கிறேன். அது குறித்து கொஞ்சம் த்கவல் வரும் பதிவுகளில் பகிரவும்.

நன்றி!!

viyasan said...

//தமிழர்களும் கலப்பினமே, முழுத் திராவிடர்கள் இல்லை என ஒருக் கட்டுரைத் தீட்டலாம் என்று தோன்றுகின்றது.என் மேல் பாய வேண்டாம், அது தான் உண்மையும் கூட. :)//
@இக்பால் செல்வன்,
த‌மிழ‌ர்க‌ளில் வ‌ட‌நாட்ட‌வ‌ர்க‌ளின் க‌ல‌ப்பு இல்லாம‌லிருந்தாலும், ஏனைய‌ திராவிட‌ர்க‌ளின் க‌ல‌ப்பு நிச்ச‌ய‌மாக‌ உண்டு. ப‌ல‌ நூற்றாண்டு கால‌ த‌மிழ‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளின் ஆட்சியாலும், ப‌டையெடுப்புக‌ளாலும் இன‌க்க‌ல‌ப்பு ஏற்பட்டிருக்க‌லாம் ஆனால் அதைச் சிங்க‌ள‌வ‌ர்க‌ளிலுள்ள‌ வேற்றின‌க் க‌ல‌ப்புட‌ன் ஒப்பிட‌ முடியாது. சிங்க‌ள‌வ‌ர்க‌ளில் குறிப்பிட்ட‌ அள‌வில் க‌ல‌ப்பு ஏற்ப‌ட்ட‌து என்ப‌தை விட‌ சிங்க‌ள இன‌மே ப‌ல்லின‌க் க‌ல‌ப்பால், அதிலும் க‌ணிச‌மான‌ அள‌வு திராவிட‌ர்க‌ளின் க‌ல‌ப்பால் ஏற்ப‌ட்ட‌தொன்று என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

viyasan said...

//இலங்கையின் சிங்களவர், தமிழர், முஸ்லிம் அனைவரும் கிட்டத்தட்ட நெருங்கியவர்களே.//
அது நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌ உண்மை. இல‌ங்கை முஸ்லீம்க‌ள் என்ன‌தான் தாங்க‌ள் அர‌புக்களின் வ‌ழிவ‌ந்த‌வ‌ர்க‌ள், த‌மிழ‌ர்க‌ள‌ல்ல என்று வாதாடினாலும், அவ‌ர்க‌ளின் ம‌ர‌ப‌ணுக்க‌ளில் 99% த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌து ஏனைய‌ திராவிட‌ர்க‌ளுடைய‌து தான்.

viyasan said...

//இந்த கருத்தாக்கம் சிங்கள மக்களிடையே அறியப்பட்டால், இலங்கைப் பிரச்சினை என்பது இல்லாமல் போகும்.//

ந‌ன்றி ச‌கோ. ச‌ர்வாக‌ன்,

த‌மிழ‌ர்க‌ளுக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்குமுள்ள‌ பூர்வீக‌த் தொட‌ர்பு சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கும் தெரியும். சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கும் த‌மிழ‌ர்க‌ளுக்குமிடையேயுள்ள‌து இனப் பிர‌ச்ச‌னைய‌ல்ல‌, நில‌ப்பிர‌ச்ச‌னை. த‌ம‌க்குள்ள‌ ஒரேயொரு நாட்டைத் த‌மிழ‌ர்களுட‌ன் ப‌கிர்ந்து கொள்ள அவ‌ர்க‌ள் த‌யாராக‌ இல்லை. எமது தாய்மண்ணின் உரிமையை விட்டுக் கொடுக்க ஈழத்தமிழர்களும் தயாராக இல்லை. இல‌ங்கைமண் த‌மிழ‌ர்க‌ளுக்கும் சொந்த‌ம் என்ப‌தை ஒப்புக்கொள்ள‌ அவ‌ர்க‌ளால் முடியாது, சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் வ‌ர‌லாறு முழுவ‌துமே த‌மிழ‌ர்க‌ளிட‌மிருந்து அவ‌ர்க‌ளின் நில‌த்தைப் ப‌றிப்ப‌து எப்ப‌டி என்ற‌ அடிப்ப‌டையில் தான் உருவான‌து. ம‌காவ‌ம்ச‌த்தின் அடிப்ப‌டையே அது தான். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் எத்த‌கைய‌ வ‌ர‌லாற்றுத் திரிப்பையும் செய்வார்க‌ள். என்று சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளுக்கும் இல‌ங்கையின் நில‌த்தில் ப‌ங்குண்டு என்று ஒப்புக் கொள்ளும் போது அல்ல‌து என்று ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளைப் பார்த்து, இல‌ங்கை முழுவ‌தும் உங்க‌ளுடைய‌து தான், நாங்க‌ள் உங்க‌ளின் த‌ய‌வில் ஒரு ஓர‌மாக‌ நீங்கள் சொல்வ‌தின் ப‌டி மூச்சுக் காட்டாமல் வாழ்ந்து விட்டுப் போகிறோம் என்று சொல்லும் போது தான் இல‌ங்கையில் த‌மிழ் ‍ சிங்க‌ள‌ பிர‌ச்ச‌னை தீரும் என்ப‌து என்னுடைய‌ க‌ருத்தாகும்.

தமிழானவன் said...

என்ன ஒரு பதிவு ! அசந்தே விட்டேன். அங்கங்கே நச் நச் என்ற வரலாற்றுத் திரிபுகளுக்கு விளக்கங்கள். அருமை

viyasan said...

ந‌ன்றி ச‌கோ.த‌மிழான‌வ‌ன்