Saturday, March 9, 2013

இந்திய‌த் தேசிய‌க்கொடியின் வ‌டிவ‌மைப்புக்குக் கார‌ண‌மாக‌ இருந்த‌ த‌மிழ்ப்பெண்‍ தில்லைய‌டி வ‌ள்ளிய‌ம்மை


இந்தியாவின் விடுத‌லைப் போராட்ட‌த்தில் கால‌த்தால் அழியாத‌ அடையாள‌த்தை ப‌தித்து விட்டுச் செல்லும் ஆற்ற‌லை அந்த‌ இளந்த‌மிழ்ப்பெண்ணின் குறுகிய‌ வாழ்க்கைக்கால‌த்தால் த‌டுத்து விட‌ முடிய‌வில்லை. இந்தியாவின் மூவ‌ண்ண‌க் கொடி உருவாக‌க் கார‌ண‌மாக‌ அமைந்த‌ அந்த‌ த‌மிழ்ப்பெண் தில்லைய‌டி வ‌ள்ளிய‌ம்மைக்குத் தான்  இந்தியாவின் தேசிய‌க் கொடியை வ‌டிவ‌மைத்த‌மைக்கு வ‌ரும் புக‌ழும் பெருமையும் உரிய‌து.  ஒரு உடையைத் தைத்த‌ தைய‌ல்கார‌ருக்கல்ல‌ அத‌ன் வ‌டிவ‌மைப்புக்குக் காரணமாக இருந்தவருக்குத் தான் அந்த‌ உடைக்கு வ‌ரும் பெயரும் புக‌ழும் போய்ச்சேரும் அது தான் நியாய‌மும் கூட‌.


காந்திய‌டிக‌ள் தென்னாபிரிக்காவில் ச‌ட்ட‌ம‌றுப்பு இய‌க்க‌த்தைத் தொட‌ங்கிய‌ போது 16 வய‌து தமிழ்ப்பெண் தில்லைய‌டி வ‌ள்ளிய‌ம்மையும் அதில் இணைந்து கொண்டு தென்னாபிரிக்க‌ அரசின் இன‌வெறிக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடினார். அதே அகிம்சை வ‌ழியிலான‌ ச‌ட்ட‌மறுப்பு போராட்ட‌ வ‌ழிமுறைக‌ளை மகாத்மா காந்தி இந்தியாவில் ந‌டைமுறைப்ப‌டுத்தினார். தென்னாபிரிக்காவில் காந்தியடிக‌ளில் இய‌க்க‌ப்போராட்ட‌ங்க‌ளில் ஈடுப‌ட்டிருக்கும்போதே வ‌ள்ளிய‌ம்மை கால‌மானார். அந்த‌ த‌மிழ்ப்பெண்ணின் துணிச்ச‌லும், நாட்டுப்ப‌ற்றும், தியாக‌மும் இந்திய‌சுத‌ந்திர‌ப் போராட்ட‌த்துக்குத் த‌லைமை தாங்க‌ த‌ன‌க்கு பலத்தைத் த‌ந்த‌தாக‌க் குறிப்பிட்டார் மகாத்மா காந்தி.


இங்கிலாந்தில் ப‌ரிஸ்ட‌ர் ப‌ட்ட‌ப்ப‌டிப்பை முடித்துக்கொண்ட‌ ம‌காத்மா காந்தி 1893 இல் தென்னாபிரிக்காவுக்குப் ப‌யணமானார். அங்கு நிற‌வெறியால் துன்புறுத்த‌ப்ப‌டும் க‌றுப்ப‌ர்க‌ளின‌தும், இந்திய‌ர்களின‌தும் நிலையைக் க‌ண்டு அதிர்ச்சியுற்றார். வெள்ளை அர‌சின் பார‌ப‌ட்ச‌ம் காட்டும் நிறவெறிக்கொள்கைக‌ளை எதிர்த்து அகிம்சைவ‌ழியில் போராட‌ முனைந்த‌ ம‌காத்மா காந்திக்கு ஆத‌ர‌வாக‌ அவ‌ருட‌ன் இணைந்து கொண்ட‌ ப‌ல‌ இள‌ம் த‌மிழ‌ர்க‌ளில் ஒருவ‌ர் தான் தில்லைய‌டி வ‌ள்ளிய‌ம்மை. இந்திய‌ சுத‌ந்திர‌ப் போராட்ட‌த்துக்கு அத்திவார‌மிட்ட‌ த‌ன்னையே அர்ப்ப‌ணித்த‌ முன்னோடிக‌ளில் அவ‌ரும் ஒருவ‌ர். 


த‌மிழ்நாட்டில் த‌ஞ்சாவூர் மாவ‌ட்ட‌த்திலுள்ள தில்லைய‌டி என்னும் கிராம‌த்திலிருந்து தென்னாபிரிக்க த‌ங்க‌ச்சுர‌ங்க‌ ந‌க‌ர‌ங்க‌ளிலொன்றாகிய‌ ஜொஹான‌ஸ்பேர்க்கிற்கு செல்வ‌ம் தேட‌ குடி பெயர்ந்த‌ இள‌ம் த‌ம்ப‌திக‌ள் முனுசாமி, ஜான‌கிய்ம்மாள் த‌ம்ப‌தியின‌ர். ஜான‌கிய‌ம்மாள் தில்லைய‌டியைச் சேர்ந்த‌வ‌ராத‌லால் வ‌ள்ளிய‌ம்மையின் பெயருட‌ன் தில்லைய‌டியும் இணைந்து கொண்ட‌து.இள‌ம் இந்திய‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் மோக‌ன் தாஸ் காந்தி தென்னாபிரிக்க‌ நிறவெறிக்கெதிராக ஆர்ப்பாட்ட‌ ஊர்வ‌ல‌ம் ந‌ட‌த்திய‌ போது அதில் வ‌ள்ளிய‌ம்மையும், அவ‌ர‌து தாயார் ஜான‌கிய‌ம்மாளும் இணைந்து கொண்டன‌ர். அந்த‌ ஆர்ப்பாட்ட‌ ஊர்வ‌ல‌ம் தென்னாபிரிக்க‌ அர‌சால் த‌டைசெய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.  அதனால் 16 வ‌ய‌தான வள்ளிய‌ம்மையைக் கைது செய்து சிறையில் அடைத்த‌து தென்னாபிரிக்க‌ அர‌சு. மூன்று மாத‌ங்க‌ளுக்கு மேலாக‌ச் சிறையிலிருந்த‌ போது காய்ச்ச‌ல் ஏற்ப‌ட்டு உயிருக்கு ஆப‌த்தான நிலையில் இருந்தார் வ‌ள்ளிய‌ம்மை. அவ‌ரை தென்னாபிரிக்க‌ அரசு விடுத‌லை செய்த‌போது ந‌ட‌க்க‌க் கூட‌முடியாம‌ல் வ‌லுவிழ‌ந்திருந்த‌ வ‌ள்ளிய‌ம்மையைப் பார்த்து, அந்த‌ தென்னாபிரிக்க‌ சிறையின் வெள்ளையின‌ அதிகாரி ஒருவ‌ர் " நீங்க‌ள் எல்லாம் இந்த‌ இந்திய‌ர்  என்ற‌ அடையாள‌த்தை விட்டு தென்னாபிரிக்க‌ர் என்று உங்க‌ளைப் ப‌திந்து கொண்டால் என்ன‌? இந்தியா ஒரு நாடு இல்லை, நீங்க‌ள், இந்திய‌ன்க‌ளுக்கு ஒரு கொடி கூட‌க் கிடையாது, நீங்க‌ள் எத‌ற்காக‌ப் போராடுகிறீர்க‌ள்" என்றார்.
அதைக் கேள்வியுற்ற‌ வ‌ள்ளிய‌ம்மை, "கொடி இருந்தால் ம‌ட்டும் இந்தியா உருவாகி விடும், விடுதலை அடைந்து விடுமென்றால், இங்கே பார், இது தான் இந்தியாவின் கொடி என்று கூறிக் கொண்டு தான் அணிந்திருந்த‌  வெள்ளை நிற‌த்தில் க‌னகாம்ப‌ர‌,ப‌ச்சை நிற‌ங்க‌ள் கொண்ட‌ புட‌வையைக் கிழித்து, அதை அசைத்துக் கொண்டே, இது என்னுடைய‌ தாய்நாட்டின் கொடி " என்றார்.
அந்த‌ ச‌ம்ப‌வ‌த்தின் பின்னால் அவ‌ரைச் ச‌ந்தித்த‌ ம‌காத்மா காந்தி, நீ சிறைக்குப் போன‌த‌ற்காக‌ வ‌ருந்த‌வில்லையா , இவ்வ‌ள‌வு உருக்குலைந்து விட்டாயே என்றார். நான் மீண்டும் சிறைக்குப் போவ‌து எம‌து போராட்ட‌த்துக்கு வ‌லுச்சேர்க்கும் என்றால் மீண்டும் சிறைக்குப் போக‌த் தய‌ங்க‌மாட்டேன் என்றார் வ‌ள்ளிய‌ம்மை. அந்த‌ வ‌ள்ளிய‌ம்மை அணிந்திருந்த‌, அவ‌ர் பெருமித‌த்துட‌ன் அசைத்த‌ அந்த‌ப் புட‌வையின் நிற‌த்தில் தான் இந்தியாவின் கொடியை வ‌டிவ‌மைத்தார் ம‌காத்மா காந்தி. வ‌ள்ளிய‌ம்மையின் உறுதி த‌ன‌க்கு போராட‌  வ‌லுச்சேர்த்த‌தாக‌க் குறிப்பிட்டார் ம‌காத்மா காந்தி.

Thillaiadi Valliammai Memorial
இந்தியாவின் தேசிய‌க் கொடியை வ‌டிவ‌மைத்த‌வ‌ர் யார் என்ப‌தில் இது போல் ப‌ல‌ க‌தைக‌ளும், ச‌ம்ப‌வங்க‌ளுமுண்டு. இந்திய‌ சுத‌ந்திர‌ப் போராட்ட‌த்தில் வ‌ள்ளிய‌ம்மை போன்ற‌ த‌மிழ‌ர்க‌ள் முன்னோடிக‌ளாக‌ இருந்த‌ உண்மையையும், வ‌ள்ளிய‌ம்மையின் உறுதியை எவ்வாறு ம‌காத்மா காந்தி நினைவுகூர்ந்தார் என்ப‌தையும் அறிந்த‌வ‌ர்கள் இந்திய‌ தேசிய‌க் கொடியின் வ‌டிவ‌மைப்புக்கு ம‌காத்மா காந்திக்கு உருவ‌மைத்துக் கொடுத்த‌வ‌ர் தில்லைய‌டி வ‌ள்ளிய‌ம்மை என்ப‌தை ஏற்றுக் கொள்வ‌ர்.
இந்த‌ப் ப‌திவின் நோக்க‌ம் முஸ்லீம்க‌ள் மட்டும‌ல்ல‌ த‌மிழ‌ர்க‌ளும் இந்திய‌ மூவ‌ண்ண‌க் கொடிக்கு உரிமை கோர‌லாம் என்ப‌தைக் காட்டுவதே. இக்கால‌த்தில் யார் இந்திய‌க் கொடியின் வ‌டிவ‌மைப்புக்கு உரிமை கோரினாலும், இந்திய‌த் தேசிய‌க் கொடி இந்திய‌ர்க‌ள் அனைவ‌ரையும் ஒருங்கிணைத்தால், அத‌ற்கு இந்திய‌ர்கள் அனைவ‌ரும் த‌ம‌து இன‌, ம‌த‌ விசுவாச‌ங்க‌ளை ஒருபுற‌ம் வைத்து விட்டு தலைவ‌ண‌ங்கினால் தில்லைய‌டி வ‌ள்ளிய‌ம்மை நிச்ச‌யமாக‌ ம‌கிழ்ச்சிய‌டைவார், அவரது ஆத்மா சாந்தியடையும்.
.....After he ( Gandhi) returned to India, on January 9, 1915, one of the first places he visited on his South Indian tour was Tranquebar where he wanted to visit some of those who had been sent back from South Africa.
When he arrived in Tranquebar on April 30, 1915, among the crowd waiting for his arrival from Mayavaram were over a hundred persons who had participated in the South African satyagraha. But one whose face he missed there was a person who would never return; she had passed away in South Africa, worn out by the struggle, when she was just 16 years old.
Thillaiyadi Valliammai, a satyagrahi Gandhiji had much admired in South Africa, was from one of the villages near Tranquebar, Thillaiyadi. On June 1, Gandhiji visited the village; it was the first village he had visited in South India, it was later recorded. There he was moved by the plight of its Dalits and legend has it that this was what made him commit himself to the uplift of the Dalits in the country.
The struggle by the Indians for a place in the South African sun was to go on for many years after the launch of that first Satyagraha movement. But from a hundred years ago this year they were not to be joined by newcomers from India. On July 1, 1911, indentured labour from India to South Africa was banned by the Government of India.
The first indentured labour from India, mostly Tamil and Telugu peasantry, left from Madras 151 years ago aboard the s.s Truro. The last ship to bring Indian labour to the sugarcane plantations of Natal was the s.s. Umlazi in 1911. That is a history that has recently been remembered in South Africa with a series of commemorative stamps.

http://www.thehindu.com/features/metroplus/madras-miscellany-gandhiji-in-thillaiyadi/article2723556.ece

http://www.thamarai.com/news-details.php?id=596

http://historicalthiru.blogspot.ca/2011/12/birth-of-indian-flag-thillaiaadi.html


2 comments:

R.Puratchimani said...

நல்ல பதிவு

Manithan said...

Nice knowing it was a Tamil who designed our national flag.