Friday, March 8, 2013

உல‌க‌ப்புக‌ழ் பெற்ற‌ தமிழ்ப்பெண்க‌ள் -‍ ச‌ர்வ‌தேச‌ பெண்க‌ள் தின‌ம் 2013


மைவாதம் நிறைந்தஈழத்தமிழர்களின் சமையலறைகளை விட்டு வெளியேறி ஈழத்தமிழ்மண்காக்கஆயுதமேந்தி, மிழர்களின் ஒற்றுமையின்மையாலும், மிழர்களின் எதிரிகளின் சதியாலும் அந்தண்ணுக்கே ம்மை உரமாக்கி வீழ்ந்த எமது மாவீரப் பெண்களுக்கும், இன்றும் இல‌ங்கை இராணுவ‌த்தின் கோர‌ப்பிடியில் உழ‌லும் ஈழத்தமிழ்பெண்களுக்கும் முதல்வக்கம்.

 

 

ஐக்கியநாடுகள் பையின் னிதஉரிமைகள் ஆணையாளர் செல்வி.நவநீதம் பிள்ளை. தென்னாபிரிக்காவில் வெள்ளையல்லாதமுதல் பெண் நீதிபதி அத்துடன் ருவாண்டாவில் டைபெற்றபோர்க்குற்றங்களை விசாரித்த, ர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் தவி குத்தர். இன்று இலங்கை அரசு வெறுக்கும் மிழர்களில் மிகவும் முக்கியமானர்மிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி. ஜெயலிதா அவர்களின் அரசியல் எப்படியாகஇருந்தாலும் அவது துணிச்சலுக்கும் சொல்வதைச் செய்யும் ன்மைக்கும் உலத்தமிழர்கள் த்தியில் அவருக்கு  எப்பொழுதும் ஆதவுண்டு.
செல்வி. ராதிகா குமார‌சாமி - ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறார்களின் நலன்களுக்கான ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசாமி. ஆப்கானிஸ்தானில் பெரிய‌வ‌ர்க‌ளின் ஒரின‌ச்சேர்க்கைப் பாலிய‌ல் வ‌க்கிர‌த்துக்குப் ப‌லிக்க‌டாவாகும் ஆப்க‌ன் சிறுவ‌ர்க‌ளைப் ப‌ற்றியும், ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய‌ க‌லாச்சார‌த்தில் ஒரு அங்க‌மாக‌ விள‌ங்கும் ந‌ட‌னமாடும் சிறுவ‌ர்க‌ள், அதாவ‌து சிறுவ‌ர்க‌ளைப் பெண்வேட‌மிட வைத்து இர‌வில் ஆட‌ வைத்து இர‌சித்து, அவ‌ர்க்ளைப் பாலிய‌லுக்குட்ப‌டுத்தும் கொடுமையைப் ப‌ற்றி முத‌லில் ஐக்கிய‌நாடுக‌ள் ச‌பையிலும் துணிச்ச‌லுட‌ன் பேசி,  அதை வெளியுல‌கும் பேச‌வைத்து உல‌க‌நாடுக‌ளை ஆப்கானிஸ்தானின் சிறுவ‌ர்க‌ளின் ப‌க்கம் முத‌லில் திரும்பிப்பார்க்க‌ வைத்த‌ ஈழ‌த்த‌மிழ்ப்பெண்.
 

 பாப் பாட‌கி  மாதங்கி (மியா) அருள்பிர‌காச‌ம்- உல‌க‌த்தில் த‌மிழ‌ர் என்றால் யாரென்று கேள்விப்ப‌ட்டேயிராத‌ மேலைநாட்டுப் பாம‌ர‌ர்க‌ளுக்கும், இளையோர்க‌ளுக்கும், த‌ன்னைத் த‌மிழ‌ச்சி என்று அறிமுக‌ப்ப‌டுத்திய‌து ம‌ட்டும‌ன்றி, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்தை எல்லோரும் அறிய‌ வைத்த‌ பெருமை ஈழ‌த்த‌மிழ‌ராகியபாப் பாட‌கி மாத‌ங்கி அருள்பிர‌காச‌த்துக்கு உரிய‌து.
 
 
செல்வி. ராதிகா சிற்ச‌பேச‌ன் - க‌ன‌டாவின் முத‌ல் த‌மிழ் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர். இல‌ங்கைக்கும், இந்தியாவுக்கும் வெளியே உல‌க‌நாடுக‌ளிலொன்றில் பாராளுமன்ற‌ உறுப்பின‌ராகிய‌ முத‌ல் த‌மிழ்ப்பெண் ம‌ட்டும‌ன்றி, க‌னேடிய‌ப் பாராளுமன்ற‌த்தில் த‌ன‌து க‌ன்னிப்பேச்சை த‌மிழிலும் நிக‌ழ்த்தி, "தேம‌துர‌த்த‌மிழோசை உல‌க‌மெலாம் ப‌ர‌வும் வ‌கை செய்த‌ல் வேண்டும் என்ற‌ பார‌தியின் க‌ன‌வை நிறைவேற்றிய‌வ‌ர்.

 

 

செல்வி. ஜ‌னனி ஜ‌ன‌நாய‌கம் - ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட‌வர். தமிழரின் மீதான இனப்படுகொலையை நீதியின் முன் கொண்டுவந்து அதற்குத்தீர்வாக தனித்தமிழீழத்தை கோரும் அமைப்பில் அங்கம் வகிப்பவர் , பேச்சாளர் , ஊடகவியலாளர் , மனித உரிமை ஆர்வலர்.

 


 
Dr. சாம் பாரி (சாம்ப‌வி ப‌ரிம‌ள‌நாத‌ன்) - அவுஸ்திரேலிய‌ தமிழ் காங்கிரசின் பேச்சாள‌ர், ஊடகவியலாளர் , மனித உரிமை ஆர்வலர். அவுஸ்திரேலிய‌ த‌மிழ‌ர்க‌ளின் வ‌ள‌ர்ந்து வ‌ரும் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்.
வேறு, உல‌க‌றிந்த‌ அல்ல‌து தாம் சார்ந்த‌ துறையில் அல்ல‌து த‌மிழுக்கு, த‌மிழ‌ர்க்கோ தொண்டு செய்து புக‌ழ் பெற்ற‌ த‌மிழ்ப்பெண்களையும்  த‌ய‌வு செய்து இணைக்க‌வும். ந‌ன்றி.


"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்......"

 

 


 

No comments: