Friday, February 15, 2013

அரேபிய - பாரசீக ஓரினச்சேர்க்கைக் கலாச்சாரம்.


2007 ம்  ஆண்டில் ஈரானிய அதிபர் அஹ்மதினேஜாத் நியூ யோர்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஈரானில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இல்லை என உளறிக் கொட்டித் தன்னை ஒரு கோமாளியாக்கிக் கொண்டது மட்டுமல்ல அந்த அரங்கு முழுவதையும் சிரிப்பில் ஆழ்த்தினார். அதை அத்துடன் விட்டு விடாமல் சில முஸ்லீம்கள், ஈரானில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இல்லை என்று ஈரானிய அதிபர் குறிப்பிடவில்லை,  ஓரினச் சேர்க்கைக் கலாச்சாரம் ஈரானில் இல்லை என்பதாகத் தான் ஈரானிய அதிபர் குறிப்பிட்டதாக அதற்கு விளக்கம் கொடுத்து அவர் ஒரு பொய்யர் மட்டுமல்ல,  தனது சொந்த நாட்டின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் , அதன் கவிஞர்களையும் கூட அறியாதவர் என்னும் கருத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்துகின்றனர் போலிருக்கிறது. அஹ்மதினேஜாத்தின் ஆட்சியிலேயே எத்தனையோ ஓரினச் சேர்க்கை ஈரானியர்கள் சிறையில் இருப்பது மட்டுமல்ல, கொல்லப்பட்டுமிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு இனத்திலும், ஏதாவதொரு வழியில், சிறியளவிலேனும் ஓரினச் சேர்க்கை வாழ்க்கை முறை நடைமுறையில்  இருந்தது  என்பதை வரலாற்றில் அடிப்படையறிவு மட்டும் கொண்டவர்கள் கூட  கொள்வார்கள் . அதைவிட எல்லா உயிரினங்களிலும் சில வகையான ஓரினச் சேர்க்கையும், ஈரினச்(Bi sexual) சேர்க்கையை முறைகள் காணப்பட்டாலும் கூடஅரேபிய - பாரசீகக் கலாச்சாரத்திலே,  அதிலும் புகழ்பெற்ற பலராலும் பாராட்டப்பெற்ற இலக்கிய, கவிதை வரலாறு உண்டு. அந்தக்  கவிதைகள் அரேபியா - பாரசீகக் கலாச்சாரத்தில் ஓரினச் சேர்க்கை வாழ்க்கை முறையைத் தெளிவுபடுத்துவது மட்டுமல்ல, எந்தளவுக்கு அந்தப் பழக்கம் பரவலாக நடைமுறையிலிருந்தது, என்பதை மட்டுமல்ல ஒரினச் சேர்க்கை இன்பத்தை, இளவயது அழகான சிறுவர்களைப்  போற்றிப், புகழ்ந்து பாடுகின்றன என்பதைக் காணலாம்.

அதாவது தமிழ்நாட்டுக் கவிஞர்கள் எல்லாம் பெண்ணைப் புகழ்ந்து, சந்திரனில் கூட பெண்மையைத் தேடிய போது இஸ்லாமியக் கவிஞர்கள் அழகான பையனுடன் பாலியல் இன்பத்தை எண்ணிக் கனவு கண்டது மட்டுமல்ல கவிதைகளில் தமது ஏக்கத்தைக் காட்டியும் தீர்த்தும் கொண்டார்கள். அபடியான பாரம்பரியத்தை வைத்துக் கொண்டு ஈரானில் அல்லது இஸ்லாமியநாடுகளில் ஓரினக்கலாச்சாரம் கிடையாது எனச் சிலர் கூறுவது வெறும் அபத்தம்.
அபு நுவாஸ் - புயகழ் பெற்ற அரபு - பாரசீக கவிஞர்.

உலகின் கவிஞர்களின் வரிசையில்  வரலாற்றில் புகழ்பெற்ற, பலராலும் கவரப்பட்ட முஸ்லீம் கவிஞர்களில் ஓருவர் பாரசீகக்தில் பிறந்த அரேபியக் கவிஞர் அபு நவாஸ். அல்லாவைப் புகழ்வதையும்,   ஒவ்வொரு கலீபாவையும் உலகிலுள்ள அரிய பொருட்கள் எதுவோ அவற்றுடன் எல்லாம்  ஒப்பிட்டுப் புகழ் பாடுவதை விடுத்து   அபு நுவாஸ் தனது கவிதைகளில் அழகான பையன்களுடன் காணும்  ஒரினச் சேர்க்கையின் இன்பத்தையும், திராட்சை மதுவின் (WINE) மயக்கத்தையும்  கவிதையாக்கி மகிழ்ந்தவர் கவிஞர் அபு நவாஸ்.  இது இஸ்லாமிய போதனைகளுக்கு  ஒத்துவராததாக, இஸ்லாமிய அடிப்படைக்கு வெளியே காணப்படுவதாக தோற்றமளிக்கலாம் . ஆனால் சுவனத்தில் "திராட்சை மது ஆறு போல் ஓடும்("rivers of wine" )  என முஸ்லீம்களுக்கு வாக்குக் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
I die of love for him, perfect in every way,
Lost in the strains of wafting music.
My eyes are fixed upon his delightful body
And I do not wonder at his beauty.
His waist is a sapling, his face a moon,
And loveliness rolls off his rosy cheek
I die of love for you, but keep this secret:
The tie that binds us is an unbreakable rope.
How much time did your creation take, O angel?
So what! All I want is to sing your praises.


(Love in Bloom; after Monteil, p. 95)


The True Jihad
The belly of the virgin
And the rear of the youth,
    A single lance pierces them both.

This is the true jihad,
And come the Last Judgement
    You will be rewarded.

தனிப்பட்ட ஒரேயொரு  அரபு- பாரசீக இஸ்லாமிய கவிஞர் அபு நுவாஸ் மட்டும் தான் ஓரினச்சேர்க்கையில் ஆழ்ந்து கவிதை மழையாகப்  பொழிந்தாரா என்றால் இல்லை, ஓரினச்சேர்க்கை என வரும்போது இஸ்லாமிய உலகில் அவருக்குப் பின்னால் எத்தனையோ பேர் வரிசையாக நிற்கின்றனர்.
 Sultan Mehmed II.
இன்று இஸ்தான்புல் என அழைக்கப்படும் துருக்கியின் பழமையான நகரங்களிலொன்றாகிய கொன்ஸ்டந்தினோபிள், முஸ்லீம்களின் படையெடுப்பில் எரிந்து கொண்டிருக்கும் முதல் நாளிலேயே சுல்தான் இரண்டாவது முகம்மதின் (Sultan Mehmed ii) முதலாவது ஆணை என்னவென்றால், அங்கிருந்த செல்வந்தர்களில் ஒருவனாகிய அவனது கிரேக்க ஆலோசகரின் இளவயது மகன்களை தான் கற்பழிக்க வேண்டுமென்பது தான். அந்த கிரேக்க ஆலோசகர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததும், அந்த இரண்டு சிறுவர்களையும் தேடிபிடித்துக் கொல்லுமாறு ஆணையிட்டாராம் சுல்தான் இரண்டாவது முகம்மது (Sultan Mehmed II)
பகழ்பெற்ற T.E. Lawrence, தனது லோரன்ஸ் ஆஃப் அரேபியா (Lawrence of Arabia) கதைகளில்,  முஸ்லீம் பெடுயுவான்(Bedouins)களின் ஓரினச்சேர்க்கைக் கலாச்சாரத்தைப் பற்றிப் பல இடங்க்களில் குறிப்பிடுகிறார்.  அரேபிய Bedouins களுடன்  தனது ஓரினச் சேர்க்கை அனுபவத்தையும் அவர்களின் ஓரினச் சேர்க்கை வேட்கையையும் பற்றிய T.E. Lawrence விவரணங்கள், பன்னிரண்டாம்  நூற்றாண்டின் கவிஞர் இபின் மாலிக்கின் கவிதைகளைப் பிரதிபலிக்கின்றன. இஸ்லாமிய கவிஞர்  இபின் மாலிக், முஸ்லீம்களால் கைப்பற்றப்பட்ட ஸ்பெயினிலிருந்து  எழுதிய கவிதை இதுவாகும்:
"Friday,
In the mosque,
My gaze fell upon a slim young man.
Beautiful
As the rising moon.
When he bent forward in prayer
My only thought was
Oh, to have him Stretched out
Flat before me,
Butt-up,
Face-down."இயற்கைக்கு மாறாக ஆண்- பெண் தொடர்பை அளவுக்கதிகமாகத்
தடை செய்தால் இப்படியான விளைவுகள் தான் ஏற்படும் போலும்இக்காலத்தில் பல இஸ்லாமிய நாடுகளில் ஓரினச்சேர்க்கை கொலைத் தண்டனையளிக்கப்படக் கூடிய குற்றமாக கருதப்பட்டாலும், எப்பொழுதும் அப்படியிருந்ததில்லை.  கவிஞர் அபு நுவாஸ் மட்டுமல்லாது இஸ்லாமிய கவிஞர் ஹாபிஸ் - ஷிரஸ்சி (Hafiz i-Shirazi), உமர் கய்யாம் கூட ஓரினச் சேர்க்கைப் பாலியல் இன்பத்தை தூண்டும் கவிதைகளை இயற்றியது மட்டுமன்றி, எவ்வாறு வைனைக் கொடுத்து அழகிய, மீசை முளைக்காத பையன்களை  மயக்கினார்கள் என்பதையும், அவர்களின்  கவர்ச்சியில் மெய்மறந்து நின்றதையும் பாடியுள்ளனர்.
முல்லாக்கள் எப்படித் தான் முறைத்தாலும், இஸ்லாமிய நாடுகளின் வரலாற்றை உற்றுநோக்கினால் அதாவது ஆண்- ஆண் காதல் பரவலாக பழக்கத்திலிருந்தது என்பதும், ஒட்டகம் மேய்க்கிறவனிலிருந்துகிற கலீபா வரை, ஹமாம்களில்(பொதுக் குளியலறைகள்)  அழகிய முகம் கொண்ட  பையன்களின் வரவையும், அவர்களின் சேவையையும்   ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தது மட்டுமல்ல அவர்களை 'சுவனத்திலுள்ள முத்துக்களுக்கு' ஒப்பானவர்கள்எனவும் புகழ்ந்துள்ளனர். அப்படியிருக்க ஈரான், சவூதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் ஓரினச்சேர்க்கைக் கலாச்சாரமோ பாரம்பரியமோ கிடையாது என யாராவது கூறினால் அது போன்ற முட்டாள்தனம் வேறெதுவுமிருக்க முடியாது

உதாரணமாக இன்றும் கூட சவூதி அரேபியாவின் ரியாத்தை ஓரினச் சேர்க்கையாளரின் தலைநகர் எனவும், அங்கு ஓரினச் சேர்க்கையாளராக இருப்பது மிகவும் இலகுவானது ஆனால் பெண்களை விரும்பு (Straight) கிறவர்களாக இருப்பது தான் கடினமானது என்கிறார் எழுத்தாளர் நாடியா லாபி (Nadiya Labi)அவருடைய "KINGDOM IN THE CLOSET" என்ற கட்டுரையில் "Sodomy is punishable by death in Saudi Arabia, but gay life flourishes there. Why it is “easier to be gay than straight” in a society where everyone, homosexual and otherwise, lives in the closet"No comments: