Monday, February 25, 2013

அவுஸ்திரேலியாவில் ஒட்டகங்கள் கொடூரமாகக் கொல்லப்படுவது முஸ்லீம்களின் இதயத்தைக் கசக்கிப் பிழிகிறதாம்??


Procession of the Sacred Camel
Annual Pilgrimage to Mecca and Medina

இந்துக்கள் பசுவின் மீது  காட்டும் பரிவை மேலை நாட்டவர்கள் மட்டுமல்ல, இந்துக்களின் மத்தியில் வாழும் முஸ்லீம்களும், கிறித்தவர்களும் கூடப் புரிந்து கொள்வதில்லை. இந்தியாவில் பசுமாட்டைக் கொல்வதை அல்லது துன்புறுத்துவதை இந்துக்கள் விரும்பாததைக் குறிப்பிட்டு பலர்  ஏளனம் செய்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

விவசாய நாடான இந்தியாவின் இந்துக்களின் வாழ்க்கையிலும், நாகரிகத்திலும்,  கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், ஏன் இலக்கியங்களிலும் கூட  மாடுகள் பிரிக்க முடியாத அங்கமாக இருந்து வந்துள்ளன. அதேபோல் பாலைவன நாடோடிகளான அரபுக்களின் வரலாற்றிலும், அவர்களின் நாகரிகத்திலும்,பண்பாட்டிலும், அவர்களின் மத நூலிலும் கூட ஒட்டகங்கள் உயர்வாகப் போற்றப்படுகின்றன.
அவுஸ்திரேலியாவில் மில்லியனுக்கும் அதிகமான கட்டாக்காலி ஒட்டகங்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டுவதைப் பார்த்து கட்டாரைச் சேர்ந்த அரபு ஒருவர் கண்கலங்குவதை அல்-ஜசீராவில் பார்த்த போது, இந்துக்கள் மாட்டின் மீது காட்டும் பரிவுக்கும், அரபுக்கள் ஒட்டகத்தில் காட்டும் பரிவுக்கும் வேறுபாடு கிடையாது, எல்லாம் ஒவ்வொருவரின் கலாச்சார பாரம்பரியத்தில் தங்கியுள்ளது என்பது தெளிவாகிறது. அத்துடன் அந்த ஒட்டகங்கள் கண்மூடித்தனமாக கொடூரமாகக் கொல்லப்பட்டு, அப்படியே அழுகிப் போவதற்கு விடப்படுவதைத் தடுக்க வேண்டும் அல்லது காருண்யமான முறையில்  கொல்லப்பட வேண்டும் என்ற நோக்கில், அதைத் தடுக்க தன்னால் ஏதாவது செய்யமுடியுமா என்றறிய  அவுஸ்திரேலியாவுக்குப் போகிறார் இந்த வீடியோவிலுள்ள  கட்டார் நாட்டு அரேபியர். அவரைப் பொறுத்தவரையில் ஒட்டகத்தை விட அழகான எதுவும் உலகிலேயே  கிடையாதாம். ஏனென்றால் அரபுக் கலாச்சாரத்தில் ஒட்டகங்களுக்கு உயர்ந்த இடமளிக்கப்பட்டுள்ளது.


 சரிஆ சட்டத்தின் கீழ் மனிதர்களின் கழுத்தையறுக்கும் அரபுக்களின் மனம்  கூட ஒட்டகம் என வரும்போது இளகி விடுகிறது பார்த்தீர்களா. குரானில் ஒட்டகத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.
 
"11:64 மேலும் என் சமுதாயத்தினரே! (பாருங்கள்) இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம்! உங்களுக்கு ஒரு சான்றாகத் திகழ்கின்றது. எனவே இதனை அல்லாஹ்வின் பூமியில் (சுதந்திரமாய்) மேய்வதற்கு விட்டுவிடுங்கள்; இதற்கு யாதொரு தீங்கும் இழைக்காதீர்கள்! அவ்வாறு தீங்கிழைத்தால், இறைவனின் வேதனை உங்களைப் பீடிப்பதற்கு வெகுநேரம் ஆகாது!

11:65 ஆயினும், அவர்கள் அந்த ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள்! அப்போது ஸாலிஹ் (அம்மக்களுக்கு) எச்சரிக்கை செய்தார்: மூன்று நாட்கள் உங்கள் வீடுகளில் சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலத் தவணை பொய்யானதல்ல!

THE SACRED COW
முஸ்லீம்கள் ஒட்டகத்தையுண்பது அனுமதிக்கப்பட்டதால், ஒட்டகங்களை கொல்வதானால், அவை துன்புறுத்தப்படாமல் கொல்லப்பட வேண்டும் என்கிறார்.   ஆனால் ஒரு இந்து தனது மத நூல்களில்  பசுவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் காட்டி, பசுவைக் கொடூரமாக வெட்டக் கூடாது, குறைந்த பட்சம் எங்களின் புண்ணியத் தலங்களுக்கு அண்மையிலாவது அப்படிச் செய்யாதீர்கள் என்றால், அப்படிக் கூறுபவர்களுக்கு இந்துத்துவா  பட்டம் கொடுத்து  இராமகோபாலனுடன்   கூட்டுச் சேர்த்து விடுவார்கள்  தமிழ்நாட்டு   முஸ்லீம்கள்.


அவுஸ்திரேலியாவின் கட்டாக்காலி ஒட்டகங்களை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது சவூதி அரேபியா

 அவுஸ்திரேலியாவில் தேடுவாரற்று அலையும்  ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஒட்டகங்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதைத்  விர்க்குமுகமாகஅவற்றுக்கு வூதி அரேபியாவில் முகாம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

19 ம் நூற்றாண்டிலே ஆப்கானிஸ்தான், இந்தியா போன்றநாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புகைவண்டிப் பாதையமைக்கும் ணிக்காகழைக்கப்பட்டஒட்டகங்கள் இன்று ல்கிப் பெருகி அவுஸ்திரேலியாவின் கிராமக்களுக்குத் தொல்லை ருகின்ற‌. அவற்றின் பெருக்கத்தை ட்டுப்படுத்தமுடியாதஅவுஸ்திரேலியஅரசு. ஒட்டங்களை உலங்குவானூர்திகளில் ந்து ஒவ்வொன்றாகச் சுட்டு அழிக்கும் திட்டத்துக்காக‌ 19 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

ஒட்டங்களைத் துரத்தித், துரத்திக் கொல்லப் போகும் செய்தி வுதி அரேபியாவிலும் ஏனையமுஸ்லீம் நாடுகளிலும் த்தஎதிர்ப்பையும், ண்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. னிதர்களைப் பொதுவிடத்தில் வைத்துக் ழுத்தையறுப்பதை பார்த்து இரசிக்கும் அரபுக்கள், அவுஸ்திரேலியாவில் ஒட்டங்கள் சுடப்படுவது மிகவும் கொடூரமானசெயல் எனக் கொந்தளித்து, இணையத்தளங்களிலும் ஒட்டத்தைக் காப்பற்காகபோராட்டத்தைத் தொடங்கியுள்ளராம். அதனால் வூதி அரேபியாவின் அரசு, அவுஸ்திரேலியாவில் தொல்லை ரும் ட்டாக் காலி ஒட்டங்களை வூதி அரேபியாவுக்கு அழைத்து வைத்து முகாம்களில் ங்கவைப்பற்குத் திட்டம் தீட்டியுள்ளது.  

14 comments:

கோவி.கண்ணன் said...

ஒட்டகத்தை குர்பானி போடும் பொழுது இதயம் ஒடையாதா ? நாக்கில் எச்சில் மட்டும் தான் ஊறுமா ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அவுஸ்ரேலியாவில் ஒட்டகங்களின் பெருக்கத்தை பல விபரணச் சித்திரங்களில் பார்த்துள்ளேன். இப்படியே முயல், டிங்கோ நாய், எலி, பல வகைக் கிளிகள் என அபரிதமாகப் பெருகி அவர்களுக்குத் தொல்லை கொடுப்பது உண்மை. கிளிகள் தவிர ஏனையவை கட்டுப்பாட்டில் வைக்க அரசு சகல முயற்சியும் எடுக்கிறது.தென் ஆபிரிக்கா தன் காடுகளில் உள்ள யானைகளில் முதியவை சிலவற்றை ஆண்டு தோறும்
கட்டுக்குள் வைத்து ஏனையவற்றுக்கு போதிய உணவு கிடைப்பதற்காகச் சுட்டுக்கொல்கிறது.
இது உலகம் பூராகவும் நடப்பதே! அறிவும், பொறுப்புமுள்ள அரசின் வேலையிதே!
ஆனால் அரேபியர்கள் ஒட்டகத்துக்குக் காட்டும் கருணை, காருண்யம் சற்று மிகைப்படுத்தப்பட்டதே!
உலகில் அழகிய மிருகம் ஒட்டகம் என்பார்கள். "இது என் குழந்தை அழகு என்பதற்கு ஒப்பானது".
இக் கருத்தை மாற்றமாட்டார்கள், காரணம் குரானில் கூறப்பட்டுள்ளதென ஆதாரம் காட்டுவார்கள்.
நிற்க அவுஸ்ரேலியாவில் நிறைய முதலைப் பண்ணைகள் உண்டு. அவை ஏன் இந்த ஒட்டக இறைச்சியை
அவற்றுக்கு உணவாக்குவதில்லை.
அவுஸ்ரேலியாவில் குரான் படிக்காதவர்கள், ஒட்டகங்களைச் சுட்டு மிகக் குறைந்த துன்புறுத்தலுடன் கொல்கிறார்கள்;
ஆனால் குரான் படித்த பாகிஸ்தானியர் ஒட்டகம் கொல்லும் லட்டணத்தை யுருயூப்பில் killing camel in pakisthan(https://www.youtube.com/watch?v=cR1T7Yiwwe0) என தட்டுங்கள்.
இதை விட ஒரு கொடுமை உண்டா. கொல்லுவதென முடிவெடுத்தால் இவர்கள் மனிதரையோ, மிருகத்தையோ இப்படித்தான் கொல்லுவார்களா?
அரேபியருக்கு எண்ணைப் பணம் உண்டு.அதனால் அதீத இரக்கத்தை மிருகத்தில் காட்டுகிறார்.
இவர் செலவு செய்து கொண்டு வந்து பாராமரித்தால், அவுஸ்ரேலியன் அரசுக்கு பலவகையிலும் லாபமே!
நடக்கட்டும் கோமாளிக் கூத்து.எனக்குக் கழுதை சுமந்த கதையே ஞாபகம் வருகிறது.
இப்பணத்தில் இவர் எதியோப்பிய இஸ்லாமியரைப் பாதுகாக்கலாம். புண்ணியம் கிட்டும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//ஒட்டகத்தை குர்பானி போடும் பொழுது இதயம் ஒடையாதா ? நாக்கில் எச்சில் மட்டும் தான் ஊறுமா ?//

ர்ர்ர்ர்ரிப்பீட்டேய்...

சிந்தனையை தூண்டக்கூடிய சூப்பர் கேள்வி..!

அதானே..!?

ஒட்டகத்தை அதே முஸ்லீம்கள் வருஷா வருஷம் குர்பானி தராங்களே..! அதை விடுங்க டெயிலிக்கும் கசாப்பு கடையில் வெட்டி தொங்கவிட்ட்டு விட்து... வாங்கிட்டு போயி சாபிடுறாங்களே..?

அது மட்டும் எப்படி சரியாம்..? அப்போ.... அது மட்டும் குர்ஆனுக்கு எதிரானது இல்லையா..?

இந்த நியாயமான கேள்விகளுக்கெல்லாம் விடைகள் அதே குர்ஆனில் அதே இரண்டு வசனங்களுக்கு மேலே...

அது என்ன ஸாலிஹ் நபியின் சம்பவம்...
அது என்ன ஒட்டக டெஸ்ட்...
எதுக்கு அந்த ஒரு குறிப்பிட்ட ஒரு ஒட்டகத்தை மட்டும் கொல்ல தடை எனபது பற்றி எல்லாம்.... படித்தால்...

இந்த பதிவரின் குர்ஆன் வசனங்களை திரித்தல் மற்றும் காழ்ப்புணர்வு கள்ளத்தனம், தகிடுதத்தம் எல்லாமே அருமையாக புரிந்து விடும்..!

எவ்வளவோ பார்த்துட்டோம்...
கண்ணா.வியாசன்...

இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்..!

viyasan said...

[இந்த பதிவரின் குர்ஆன் வசனங்களை திரித்தல் மற்றும் காழ்ப்புணர்வு கள்ளத்தனம், தகிடுதத்தம் எல்லாமே அருமையாக புரிந்து விடும்..!]
ஆஷிக் காக்கா,

நான் எங்கே குரான் வசனங்களைத் திரித்தேன், உங்களில் பலரைப் போலல்லாது அடுத்தவர்களின் மதநூல்களை திரிப்பது அல்லது இழிவுபடுத்தும் பழக்கம், அல்லது உங்களைப் போன்றவர்களுக்கு உள்ள காழ்ப்புணர்வு, கள்ளத்தனம் எல்லாம் என்னிடம் கிடையாது. உங்களுக்குத் தெரியாத அல்லது புரியாத விடயங்களை அப்படி எதுவும் கிடையாது என மறுக்கும் பழக்கம் உங்களுக்கு உண்டென்பதை, ஒரு நாள் கருத்துப் பரிமாற்றத்திலேயே கண்டு கொண்டேன். கீழேயுள்ள இணையத்தளத்திலிருந்து தான் நான் குறிப்பிட்ட குரான் வாசகங்களை எடுத்தேன். என்னுடைய அவதானத்தில் வாகாபிகள் தமது கொள்கைக்கு ஏற்றவாறு திருக்குரானின் வாசகங்களை தமிழில் மொழிபெயர்க்கிறார்கள் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. உதாரணமாக நீங்கள் எனக்குக் காட்டிய ஹாடித்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இணைய லிங்கையும் அரபு உலமாக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பார்த்தீர்கள் அல்லவா?

http://www.ift-chennai.org/tafheem-tamil.php?sura=8&verse=11&to=19

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

உங்கள் திரித்தல், கள்ளத்தனம் எது என்றால்...

இந்த ஒட்டகம் எல்லா ஒட்டகம் போல அல்ல. அது அந்த மக்கள் 'ஸாலிஹ் ஒரு நபியா' என்பதற்காகவே கேட்டு பெற்ற ஓர் இறைவனின் அத்தாட்சி.

தங்களுக்கு அற்புதமாக வழங்கப்பட்ட அந்த ஒட்டகத்தை அது இறைவனின் அத்தாட்சியை நிறுவும் சமயம் புரிந்து கொண்டு கட்டளையை மீறி அறுத்து விட்டனர்.

எனவே, அதற்குரிய தண்டனை பெற்றனர்.


இந்த ஒட்டகம் சம்பந்தமான 'கொல்ல கூடாது' என்ற சட்டம் அதே ஊரில் இருந்த மற்ற ஒட்டகத்துக்கே பொருந்தாது எனும்போது... ஆஸ்திரேலியாவாம்..!

செமை காமடி..!

மட்டுமின்றி, இன்றுள்ள ஒட்டகம் எலாம் ஏதோ முஸ்லிம்களுக்கு 'புனிதமான மிருகம்' (?!) என்பது போல பசுவோடு ஒப்பிட்டு எழுதி உள்ளீர்கள்.


இதைத்தான் திரித்தல், கள்ளத்தனம் என்றேன்..!

//சாரிஆ சட்டத்தின் கீழ் மனிதர்களின் கழுத்தையறுக்கும் அரபுக்களின் மனம் கூட ஒட்டகம் என வரும்போது இளகி விடுகிறது பார்த்தீர்களா. //-------இதுதான் காழ்ப்புணர்வு..!


குற்றவாளிகளை தூக்கில் துடிதுடிக்க பல நிமிஷம் தொங்க விடும் சித்ரவதையை விட, இலகுவான விரைவான வலி குறைவான சாவு தண்டனை கழுத்தை ஒரே நொடியில் தூண்டிப்பதே..!

viyasan said...

//இந்த ஒட்டகம் எல்லா ஒட்டகம் போல அல்ல. அது அந்த மக்கள் 'ஸாலிஹ் ஒரு நபியா' என்பதற்காகவே கேட்டு பெற்ற ஓர் இறைவனின் அத்தாட்சி. தங்களுக்கு அற்புதமாக வழங்கப்பட்ட அந்த ஒட்டகத்தை அது இறைவனின் அத்தாட்சியை நிறுவும் சமயம் புரிந்து கொண்டு கட்டளையை மீறி அறுத்து விட்டனர். எனவே, அதற்குரிய தண்டனை பெற்றனர்.இந்த ஒட்டகம் சம்பந்தமான 'கொல்ல கூடாது' என்ற சட்டம் அதே ஊரில் இருந்த மற்ற ஒட்டகத்துக்கே பொருந்தாது எனும்போது... ஆஸ்திரேலியாவாம்..!//

உண்மையிலேயே செமை காமெடி தான், ஆஷிக் காக்காவுக்கு எப்ப‌வுமே தும்பை விட்டு வாலைப்பிடிப்ப‌து தான் வேலை போலிருக்கிற‌து. நான் மேலே குறிப்பிட்ட‌ குரானின் வாசக‌ங்க‌ளின் க‌ருத்து என்ன‌, எந்த‌ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் கூற‌ப்ப‌ட்ட‌து என்ப‌தில் என‌க்குக் க‌வ‌லை கிடையாது. அது என‌க்குத் தேவையில்லாத‌ ஒன்று. என்னுடைய‌ இந்த‌ப் ப‌திவின் மூல‌ம் நான் சொல்வ‌தெல்லாம், இந்துக்க‌ள் ப‌சுவிட‌ம் காட்டும் ப‌ரிவுக்கும், ஒரு அர‌பு ஒட்ட‌க‌ங்க‌ள் கொடூர‌மாக‌க் கொல்ல‌ப்ப‌டுவ‌தைப் பார்க்கச் சகிக்காம‌ல் துடிப்ப‌த‌ற்குக் காரண‌ம் ம‌த‌ம் ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ர்க‌ளின் வ‌ரலாறு, நாக‌ரீக‌ம் என்ப‌வ‌ற்றுட‌ன் எவ்வாறு அந்த‌ மிருக‌ம் அவ‌ர்க‌ளின் முன்னோர்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் வாழ்ந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பில், கால‌நிலையில் உத‌வியுள்ள‌து என்ப‌திலும் த‌ங்கியுள்ள‌து என்ப‌து தான். உதார‌ண‌மாக‌ இந்துக்க‌ள் ப‌சுக்க‌ளிலும், அர‌புக்க‌ள் ஒட்ட‌க‌ங்க‌ளிலும் காட்டும் ப‌ரிவைப் போல‌வே ஆக்டிக்கில் வாழும் எஸ்கிமோக்க‌ள் நாய்க‌ளில் ப‌ரிவைக் காண்பிப்ப‌துட‌ன் அவ‌ர்க‌ளிடமும் நாய்க‌ளைப் ப‌ற்றி உய‌ர்வான‌ க‌ருத்து இருக்கலாம் ஏனென்றால் அந்த‌ கொடுமையான‌ குளிர்பிர‌தேச‌த்தில் வாழ‌ அந்த‌ நாய்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு உத‌வுகின்ற‌ன‌.

நான் அந்த‌ குரான் வாச‌க‌ங்க‌ளையும் இணைத்த‌த‌ன் காரண‌ம் குரானிலும் ஒட்ட‌க‌த்தைப் ப‌ற்றிக் குறிப்பிட‌ப‌ப்ட்டுள்ள‌து என்ப‌தைக் காண்பிக்க‌ ம‌ட்டும் தானே த‌விர‌, அது ஆண் ஒட்ட‌கமா, அல்ல‌து பெண் ஒட்ட‌கமா, முஸ்லீம்க‌ள் அறுத்துத் தின்றார்க‌ளா அல்ல‌து அப்ப‌டியே தின்றார்க‌ளா, அல்ல‌து அது ந‌ல்ல‌ வாய், தொங்கிய‌, இந்த‌ க‌த்தாரி அர‌பு கொஞ்சிய‌ ஒட்ட‌கம் மாதிரி, உல‌கிலேயே அழகான‌தா, அல்ல‌து அசிங்க‌மான‌தா என்ப‌தை எல்லாம் என‌க்குக் க‌வ‌லை இல்லை. யார் எதைச் சொன்னாலும், ஏதோ எல்லோரும் குரானின் போத‌னைக‌ளைக் கேட்கத் துடிக்கிறார்க‌ள் என்ப‌தாக நினைத்துக் கொண்டு வ‌ஹாபி பிர‌ச்சார‌ம் ப‌ண்ணாம‌ல்,இனிமேலாவ‌து ப‌திவை வாசித்திப் ப‌தில‌ளிப்பீர்க‌ள் என‌ நம்புகிறேன். லாலிஹ்ஜ ந‌பியா, அல்ல‌து ம‌ல‌க்கு வ‌ந்த‌தா, இது எல்லாம் என‌க்குத் தெரியாத‌ மொழியில் தேவையில்லாத‌ வார்த்தைக‌ள். சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்க‌ள்.உங்க‌ளுடைய‌ ரோத‌னை தாங்க‌ முடிய‌வில்லை ஆஷிக் காக்கா. :)

viyasan said...

//மட்டுமின்றி, இன்றுள்ள ஒட்டகம் எலாம் ஏதோ முஸ்லிம்களுக்கு 'புனிதமான மிருகம்' (?!) என்பது போல பசுவோடு ஒப்பிட்டு எழுதி உள்ளீர்கள்.//
The Procession of the SACRED Camel எகிப்தின் கெய்ரோவில் Art Gallery யிலிருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌து. உண்மையில் தீவிர‌வாத‌ வ‌ஹாபியிச‌ம் என்ற‌ தீ ப‌ர‌வுமுன்ன‌ர் ச‌வூதி அரேபியாவிலும் க‌லையும், ஓவியமும் க‌விதையும் அரபுக்களின் வாழ்க்கையில் நிறைந்திருந்த‌து, க‌லைக‌ளுக்கு இஸ்லாம் எதிரிய‌ல்ல‌. எகிப்தில் ந‌டைபெறும் Festival of the Mah'mal ஐக் காட்டும் ஓவிய‌த்தில் ஒட்ட‌கத்தை புனித‌மான‌ ஒட்ட‌க‌மாக‌ (The Sacred Camel) தான் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. அதைப்ப‌ற்றிய‌ விப‌ர‌ங்க‌ளையும் ப‌ட‌ங்க‌ளையும் இன்னொரு ப‌திவில் பார்ப்போம். :)

viyasan said...

//குற்றவாளிகளை தூக்கில் துடிதுடிக்க பல நிமிஷம் தொங்க விடும் சித்ரவதையை விட, இலகுவான விரைவான வலி குறைவான சாவு தண்டனை கழுத்தை ஒரே நொடியில் தூண்டிப்பதே..!//

ஆஷிக் காக்கா,

சாரிஆவின் காட்டுமிராண்டித்த‌ன‌த்தை, நாடோடிக‌ளாக‌ பாலைவ‌ன‌த்தில் வாழ்ந்த‌ காட்ட‌ர‌பிக‌ளின் குடும்ப‌த்தில் ஒருவ‌ன் ம‌ற்ற‌ நாடோடிக‌ளால் கொல்ல‌ப்ப‌ட்டால் அவ‌ன‌து இழ‌ப்பை ஈடு செய்ய, ஒரு ஒட்ட‌க‌த்தை அல்ல‌து ந‌ட்ட‌ ஈடாகப் ப‌ண‌ம் அல்ல‌து பெறும‌தியான பொருட்க‌ளைக் கொண்டு ஈடு செய்வ‌தும் அப்ப‌டிக் கொடுக்க‌ முடியாது விட்டால் ப‌ழிக்குப் ப‌ழி, இர‌த்த‌துக்கு இர‌த்த‌ம் எனப் ப‌ழி வாங்கும் சாரியா ச‌ட்ட‌ம் உல‌கின் நாக‌ரீக‌ம‌டைந்த‌ இன‌ங்க‌ளிலொன்றாகிய‌ த‌மிழின‌த்தின் பிற‌ந்து கால‌த்தின் கோல‌த்தால் வ‌ஹாபிக‌ளாக‌ மாறி வ‌ழித‌டுமாறி நிற்கும் த‌மிழ் முஸ்லீம்க‌ளுக்குத் தேவையா என்ப‌தை எதிர்கால‌த்தில் நாம் விவாதிக்க‌ நேரிட்டால் இதைப் ப‌ற்றியும் பேசுவோம். :)

viyasan said...

//இப்பணத்தில் இவர் எதியோப்பிய இஸ்லாமியரைப் பாதுகாக்கலாம். புண்ணியம் கிட்டும்.///

@யோக‌ன்பாரிஸ்,

எல்லாம் வெறும் வாய்வீர‌ம் தான். எண்ணெய்வ‌ள‌ இஸ்லாமிய‌ நாடுக‌ளைப் போல க‌ஞ்ச‌ன்க‌ள் கிடையாது. வ‌ஹாபியிச‌த்தை வறிய‌நாடுக‌ளில் ப‌ர‌ப்ப‌ ம‌ட்டும் தான் ச‌வூதி அரேபியா ப‌ண‌த்தைச் செல‌விடும். சுனாமியால் பல‌ முஸ்லீம் நாடுக‌ள் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ போது கூடிய‌ள‌வில் நிதியுத‌விய‌ளித்த‌து மேலைத்தேய‌ கிறித்த‌வ‌ நாடுக‌ள் தான். சோமாலி முஸ்லீம்க‌ள், எதியோப்பிய‌ முஸ்லீம்க‌ளும் க‌ஞ்சிக்கு வ‌ழியில்லாம‌ல் அலையும் போது உண‌வ‌ளித்துக் காத்த‌வ‌ர‌க்ளும் கிறித்த‌வ‌ மேலைநாடுக‌ள் தான். க‌ன‌டா ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில் ஆபிரிக்க‌ அக‌திமுகாம்க‌ளிலிருந்து அழைத்துவ‌ர‌ப்ப‌ட்டு, இல‌வ‌ச‌மாக‌ க‌ல்வி, வீடு, எல்லாம் வாழ‌ வ‌ச‌தி செய்து கொடுத்த‌பின்ன‌ர் இன்று ப‌ல்கிப்பெருகி, அமெரிக்காவையும், க‌னடாவையும் திட்டித் தீர்க்கும் ஒசாமா ஆதர‌வு எதியோப்பிய‌, சோமாலிய‌ முஸ்லீம்க‌ள் ப‌ல‌ர் இருக்கின்றார்க‌ள், ந‌ன்றி என்ப‌தை முஸ்லீம்க‌ளிட‌ம் காண்ப‌து அரிது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்க‌ள்.உங்க‌ளுடைய‌ ரோத‌னை தாங்க‌ முடிய‌வில்லை//

ஏன்...?
காரணம்..?

//...என்ப‌தை(பற்றி) எல்லாம் என‌க்குக் க‌வ‌லை இல்லை//

------என்று இப்படி சொல்லிக்கொண்டு இஷ்டத்துக்கு பிளாக்கில் எதையும் புரிந்து கொள்ளாமல் எழுத முடியாது.

அப்டி சிறுபிள்ளை தானமாக எழுதினால்... எதிர்ப்பு வரத்தான் செய்யும். ரோதனைகள் வரத்தான் செய்யும். எதிர்கொள்ள பழக்கவும்.

காரிகன் said...

சவூதி அரேபியா, பாலஸ்தீனம், பாகிஸ்தான் எதியோப்பியா,மேலும் பல இஸ்லாமிய நாடுகளுக்கு கிருஸ்துவ மேலை நாடுகள் குறிப்பாக அமேரிக்கா செய்யும் பண பட்டுவாடா பில்லியன்களை தாண்டும். இத்தனை பணத்தையும் வாங்கிகொண்டு இந்த முஸ்லிம்கள் கிருஸ்துவர்களையும் அவர்களின் நாடுகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நரம்பு புடைக்க கத்துவது அவர்களின் கலாச்சாரம். எல்லாம் அவர்கள் படிக்கும் புத்தகத்தில் உள்ள பிழை.

viyasan said...

//அப்டி சிறுபிள்ளை தானமாக எழுதினால்... எதிர்ப்பு வரத்தான் செய்யும். ரோதனைகள் வரத்தான் செய்யும். எதிர்கொள்ள பழக்கவும்.//

ஆஷிக் காக்கா,
நான் சிறுபிள்ளைத் த‌ன‌மாக‌ எழுதுகிறேனோ இல்லையோ நீங்க‌ள் அவ‌ச‌ர‌க்குடுக்கை போல் ப‌திவை முழுதாக‌ வாசித்துச் சொல்லுகின்ற‌ க‌ருத்தை அறிய‌மால் குரான் வாச‌க‌ங்க‌ளை அனாவ‌சியாமாக‌ எடுத்து விடுகிறீர்க‌ள் என்ப‌து தெரிகிற‌து. அப்ப‌டி தேவையில்லாம‌ல் திருக்குரானின் வாச‌க‌ங்க‌ளை உப‌யோகிப்ப‌தும், அதை அவ‌மதிப்ப‌த‌ற்குச் சம‌மான‌து என்ப‌து முச‌ல்மானாகிய‌ உங்க‌ளுக்குத் தெரிய‌வில்லை, பார்த்தீர்க‌ளா? உங்க‌ளது ரோத‌னை ச‌கிக்க‌க் கூடிய‌து, அத‌னால் ப‌ர‌வாயில்லை. :))

viyasan said...

@காரிக‌ன்,
உண்மையில் இந்த‌ விட‌ய‌த்தில் மேலைநாடுக‌ளின் ஆட்சியாள‌ர்க‌ளின் கொள்கைக‌ள் என்ன‌வாக‌ இருந்தாலும், பெரும்பான்மை மேலைநாட்டு ம‌க்க‌ளின் பெருந்த‌ன்மைக்கும், தாராள‌ ம‌ன‌ப்பான்மைக்கும் கார‌ண‌ம் அவ‌ர்க‌ளின் கிறித்தவ‌ம‌த‌ப் பார‌ம்ப‌ரிய‌ம் என்ப‌தை யாராலும் ம‌றுக்க‌ முடியாது.

காரிகன் said...

மிகச்சரியான கருத்து. கிருஸ்துவத்தின் மத சுதந்திரமே அதன் தற்போதைய இழந்த நிலைக்கும், ஸ்திர தனமைக்கும் சான்று.