Saturday, February 23, 2013

பெரியாருக்கும் பார்ப்பன‌ர்க‌ளுக்கும் பெரிய‌ வேறுபாடில்லை என்கிறார் த‌மிழ்நாடு தவ்கீத் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் ஜெய்னுலாப்தீன்.



"கடவுளைச் சொல்லி ஏமாத்திறவனும் இருக்கிறான், கடவுள் இல்லை என்று சொல்லி ஏமாத்திறவனும் இருக்கிறான்."





க‌ட‌வுள் இல்லையென்று சொன்னாரில்ல‌ பெரியார். பெரியார் என்ன‌ தொழில் ப‌ண்ணிச்சாப்பிட்டாரு.இல்லை, க‌ட‌வுள் இல்லையென்று சொல்வ‌து தான் சாப்பாடு, பெரியார் என்ன‌ தொழில் ப‌ண்ணிச் சாப்பிட்டாரு? ம‌த‌த்தை வைத்து அவ‌ங்க‌ சாப்பிட்ட‌ மாதிரி, இவ‌ர் ஒரு வியாபாரியாக‌ இருந்து கொண்டு, ஒரு விவ‌சாயியாக‌ இருந்துகிட்டு இவ‌ர் சாப்பிட‌வில்லை, இவ‌ரும் ஒரு சித்தாந்த‌த்தை எடுத்துக்கொண்டு அதைச் சொல்வ‌த‌ன்மூல‌மாக‌வும் நிதி தான் திர‌ட்டினாரு. எந்த‌வொரு கூட்ட‌த்துக்கு வ‌ந்தாலும் காசில்லாம‌ல் வ‌ர‌மாட்டாரு.க‌ல்யாண‌த்துக்கு இவ்வ‌ள‌வு காசு,க‌ருமாதிக்கு இவ்வ‌ள‌வு, வீட்டில‌ த‌ண்ணி குடுக்க‌ கேட்டு வைச்சிருந்தாரா இல்லையா? பெரியார் வ‌ந்து எந்த‌ வீட்டுக்கு வ‌ர்ற‌தா இருந்தாலும்,உன் வீட்டில‌ நான் சாப்பிட‌ற‌தா இருந்தா என‌க்கு இவ்வ‌ள‌வு த‌ர‌ணும், உன் வீட்டில‌ த‌ண்ணி குடிக்கிற‌தா இருந்தா இவ்வ‌ள‌வு த‌ர‌ணும், உன் குழ‌ந்தைக்குப் பெய‌ர் வைக்கிற‌தா இருந்தா இவ்வ‌ள‌வு த‌ர‌ணும்.என்று சொல்லி, இந்த‌ உஞ்சவிருத்திப் பார்ப்பான்க‌ள் என்று குற்ற‌ம் சும‌த்தினாரே, அவங்க‌ செய்த‌மாதிரி வேலையை அவ‌ர் செஞ்சாரா இல்லையான்னா, செஞ்சாரு. அதே மாதிரி தான் செஞ்சாரு.அவ‌ர் தொழில் எதுவும் ப‌ண்ண‌வில்லை. மதத்தை வந்து வயிற்றுப்பிழைப்புக்கு வழி ஆக்கிக் கொண்டவனும் இருக்கிறார்கள், மதம் இல்லை என்பதை வயிற்றுப் பிழைப்புக்கு வழியாக்கிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.  ம‌த‌த்தைச் சொல்லிக்கிட்டும் ச‌ம்பாரிக்கிறான், ம‌த‌ம் இல்லையின்னு சொல்லிக்கிட்டும் ச‌ம்பாரிக்கிறான்.

15 comments:

முரசொலி மாறன்.V said...

கொலைகாரனும் கத்தி தான் எடுக்கிறான் மருத்துவனும் கத்தி தான் எடுக்கிறான் .ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கில்ல ? அதுமாதிரி தான் .

Anonymous said...

what a gret comment maarn

ஜெயம் said...

போலி மருத்துவனாக இருந்தால் என்ன செய்வது?

Fakruddin - Kuwait said...

இப்போ இவர் என்ன பண்ணிக்கிட்டு இருக்கார்? இவருக்கு எந்த வழியில் பணம் வருகிறது? எதை மூலதனமா வச்சு இவர் சம்பாதிக்கிறார்? இதற்கெல்லாம் இவர் விடை சொல்வாரா? முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து எச்சில் துப்பினா அது யார் முகத்தில் விழும் என்று அவருடைய அடிவருடிகள் அவருக்கு சொல்லி கொடுப்பார்களா??......

Fakruddin - Kuwait said...

இப்போ இவர் என்ன பண்ணிக்கிட்டு இருக்கார்? இவருக்கு எந்த வழியில் பணம் வருகிறது? எதை மூலதனமா வச்சு இவர் சம்பாதிக்கிறார்? இதற்கெல்லாம் இவர் விடை சொல்வாரா? முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து எச்சில் துப்பினா அது யார் முகத்தில் விழும் என்று அவருடைய அடிவருடிகள் அவருக்கு சொல்லி கொடுப்பார்களா??......

தமிழானவன் said...

இந்தக் காணொளியை நான் பார்க்கவில்லை. எனது இணைய இணைப்பு வேகம் குறைவு, அது லோட் ஆகும் வரை காத்திருக்கும் பொறுமை எனக்கில்லை. ஒரு வேளை அவர் சொன்னது உண்மையெனில்,

பெரியார் மதத்தை எதிர்த்ததால் அவருக்கு சுக வாழ்வு கிடைக்கவில்லை. சுகவாழ்வுக்கு ஆசைப்பட்டிருந்தால் அவர் ஏன் மத்த்தை ஆதரித்துப் பேசி காசு பார்க்காமல் எதிர்த்துப் பேசி எதிரிகளை சம்பாதித்திருக்க வேண்டும் ? அவருக்கிருந்த சொத்துக்கு கால் நீட்டிப் படுத்து ஆயுசை முடித்திருக்கலாம், மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு தள்ளாத வயதில் அலைந்திருக்க வேண்டியதில்லை. ஜாதித் தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, இன உணர்வு, மொழி உணர்வு ஊட்டியது இப்படிப் பன்முகம் கொண்ட ஒரு சீர்திருத்த வாதியை வெறும் நாத்திகர், மத எதிர்ப்பாளர் என்று சுருக்கிப் பார்ப்பது நேர்மைக் குறைபாடு.

Jayadev Das said...

Good!!

Anonymous said...

//கொலைகாரனும் கத்தி தான் எடுக்கிறான் மருத்துவனும் கத்தி தான் எடுக்கிறான் .ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கில்ல ? அதுமாதிரி தான்//

Great Comment !!!!

Well Done

Anonymous said...

//கொலைகாரனும் கத்தி தான் எடுக்கிறான் மருத்துவனும் கத்தி தான் எடுக்கிறான் .ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கில்ல ? அதுமாதிரி தான் //

Great Comment!!!

Well Done!

ராவணன் said...

இந்த பீ..ஜெ என்ன தொழில் செய்றான்?

வேகநரி said...

பெரியாரு என்பவரும் தமிழர்களை அரபு மதத்துக்கு போகும்படி சொன்னார். த‌மிழ்நாடு தவ்கீத் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் ஜெய்னுலாப்தீனும் அதையே சொன்னார். நீங்க தொடர்ந்து எழுதுங்க.

Anonymous said...

பெரியாருக்கும் வெளிநாட்டு பணம் கிடைத்து இருந்தால் அவரும் கலக்சென் பண்ணி இருக்கமாட்டார்

சார்வாகன் said...

வணக்கம் சகோ வியாசன்,
நல்ல பதிவு!!.

இந்த பீ.சே வின் உளரல்கள் வழக்கமான ஒன்று என்றாலும்,இஸ்லாமையும் நல்ல மதம் என் சொன்ன பெரியாருக்கு வேண்டும் என்வே சொல்வேன்!!

பார்ப்பனர்கள் என்பது ஒரு சாதியை பொதுவாக குறிப்பது போல் தெரிந்தாலும், மதம் சார் பணிகளை செய்து பிழைக்கும் கூட்டத்தை குறிக்கிறது எனலாம்.

பெரியார் பகுத்தறிவுக் கருத்துகளை சொல்லி என்ன சம்பாதித்தார்?

இட ஒதுக்கீடு தமிழகத்தில் வெற்றி பெற்றதன் முக்கிய காரணம் பெரியார்& திராவிட இயக்கங்களே என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது!!.

பார்ப்பனர்கள்= பீ.சே என்பதே சரி!!

இந்த பீ.சே வினால் முஸ்லிம்களுக்கு கூட எந்த பிரயோசனமும் கிடையாது!!


இந்த ஆளின் குட்டுகளை கூட இருந்தவர்களே வெளிப்படுத்துவது அருமை!!
http://poyyanpj.blogspot.com/

http://sengiskhan.blogspot.com/2011/12/blog-post_271.html
நன்றி!!

தருமி said...

//ம‌த‌த்தைச் சொல்லிக்கிட்டும் ச‌ம்பாரிக்கிறான், //

இது அவர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டதோ...??

விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு இவர் பேசுறது ரொம்ப எனக்குப் பிடிச்சிப் போச்சு.

Anonymous said...

Do you understand why Muslim fundamentals are hated all over the world?