Tuesday, January 29, 2013

இந்தியாவில் க‌சாப்பின் தூக்குத்த‌ண்ட‌னையை எதிர்த்த‌ முஸ்லீம்க‌ள் ச‌வூதி அரேபியாவில் றிசானாவின் சிர‌ச்சேதத்தை நியாய‌ப்ப‌டுத்துவ‌தேன்.


இந்தியாவில் ப‌ல‌ அப்பாவி இந்திய‌ர்க‌ளைக் செய்த‌ பின்ன‌ரும்  , ப‌ல‌ மேன்முறையீடுக‌ளைச் செய்ய‌ அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌து ம‌ட்டும‌ன்றி கோடிக்க‌ண‌க்கான‌  ரூபாய்கள் செல‌வில் ப‌ல‌வருட‌ங்க‌ளாக வழக்கு ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு, க‌சாப்புக்குத் தூக்குத்த‌ண்ட‌னை அளித்த‌தைக் கூட‌ த‌வ‌று என‌ எதிர்த்த‌து ம‌ட்டும‌ல்ல‌, அதிலும் ப‌ல‌ குற்ற‌ங்க‌ளைக் க‌ண்டு பிடித்து, ப‌த்தி ப‌த்தியாக‌ அதைப்ப‌ற்றி எழுதித்த‌ள்ளிய‌ தமிழ்நாட்டு முஸ்லீம்கள், ஒரு அப்பாவிப் பெண், அதுவும் ஒரு முஸ்லீம் பெண் ச‌வூதி அரேபியாவில், குரூர‌மாக‌, மிக‌வும் காட்டுமிராண்டித்த‌ன‌மாக‌ப் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌தை ம‌ட்டும் நியாய‌ப்ப‌டுத்துவ‌தேன்.
 


க‌சாப்பிற்கு ம‌ர‌ணதண்ட‌னை இந்தியாவில் அளிக்க‌ப்ப‌ட்ட‌து ஆனால் றிசானா ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌து ச‌வூதி அரேபியாவில் என்ப‌தாலா? த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ளுக்கு ஏன் இவ்வ‌ள‌வு அரேபிய‌ விசுவாச‌ம் என்ப‌தை முஸ்லீம்க‌ள‌ல்லாத‌ என்னைப் போன்ற‌வர்க‌ளால் புரிந்து கொள்ள‌வே முடிய‌வில்லை.


காட்டுமிராண்டித்த‌ன‌மான‌ சிர‌ச்சேதத்தை எதிர்த்துக் க‌ருத்துத் தெரிவித்து  த‌மிழ்நாட்டு இஸ்லாமிய‌ இய‌க்க‌ங்க‌ளின் ப‌கையைச் ச‌ம்பாதித்துக் கொண்டார் ம‌னுஸ்ய‌புத்திர‌ன் எனப்ப‌டும் சாகுல் ஹமீது.

ம‌னுஸ்ய‌புத்திர‌ன் ம‌ட்டுமல்ல‌ உல‌கிலுள்ள‌ மனித‌வுரிமை இய‌க்க‌ங்க‌ள் அனைத்துமே  கொலைக்குற்றம் சாட்ட‌ப்ப‌ட்ட‌ போது றிசானாவுக்கு 17 வ‌யது என்ப‌துடன் அந்த‌ ப‌கிர‌ங்க‌ சிர‌ச்சேத‌ம் ம‌னித‌நேய‌ம‌ற்ற‌து ம‌ட்டும‌ல்ல‌ உல‌கநாடுக‌ளால‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ட்ட‌ங்க‌ளுக்கெதிரான‌து என‌வும் கூறுகின்ற‌ன‌.

 இந்தியாவில் க‌சாப்பின் தூக்குத்த‌ண்ட‌னையை எதிர்த்த‌து ம‌ட்டும‌ல்ல‌ அப்ச‌ல் குருவுக்குக் கூட‌த் தூக்குத்த‌ண்டனைய‌ளிப்ப‌து த‌வ‌றென‌ இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் வாதாடிய‌ ப‌ல‌ த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் உண்டு. ஆனால் இன்று தன‌து தாய்மொழியாகிய‌ த‌மிழில் அவ‌ருக்கு எதிரான‌ குற்ற‌ங்க‌ளை எடுத்துக் கூறாம‌லேயே, ஏழு வ‌ருட‌ங்க‌ளாக‌ச் சிறையில் வாடிய‌பின்ன‌ரும் க‌ழுத்தை வெட்டி ஒரு அப்பாவிப் பெண்ணைப் படுகொலை செய்த‌து த‌வ‌று, இந்த‌ இருப‌த்தோராம் நூற்றாண்டில் அது வெறும் காட்டுமிராண்டித்த‌ன‌ம் என்று துணிந்து ஒரு த‌மிழ்நாட்டு எழுத்தாள‌ர் கூறிய‌தை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியிருக்கின்ற‌ன‌ த‌மிழ்நாட்டு இஸ்லாமிய‌ இய‌க்க‌ங்க‌ள். த‌மிழ்நாட்டில் அர‌பும‌யமாக்க‌ல் ம‌ட்டும‌ல்ல‌ த‌லிபானிச‌மும் வெகு வேகமாக வேரூன்றி வருகிற‌து என்ப‌த‌ற்கு இதை விட‌ வேறு ஆதார‌ம் தேவையேயில்லை.


அர‌பும‌ய‌மாக்க‌ப்ப‌ட்ட‌ சாரியா சேரிக‌ள்(Sharia Ghettos) த‌மிழ்நாட்டில் உருவாக்க‌ப்பட்டு இன்று த‌ம்மைத் த‌மிழ‌ர்க‌ளாக‌க் க‌ருதும் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் முழுமையாக‌ அர‌பும‌யமாக்கப்ப‌ட்டு இல‌ங்கையில் போன்று வெறும் த‌மிழ்பேசும் முஸ்லீமாக‌ மாறிக் கொண்டு வ‌ருகிறார்க‌ள் என்ப‌தைக் காண‌லாம். இத்த‌கைய‌ அர‌பும‌ய‌மாக்க‌ப்ப‌ட்ட‌, அர‌பு விசுவாச‌முள்ள‌ சாரியா சேரிக‌ள் த‌மிழ்நாட்டின் ஒவ்வொரு கிராம‌த்திலும், ந‌க‌ர‌ங்க‌ளிலும் உருவாக்க‌ப்படுவ‌து த‌மிழ் ‍ முஸ்லீம் உற‌வில் இல‌ங்கையில் ந‌டைபெறுவ‌தை விட‌ மோச‌மான‌ நிலையுருவாக‌ வ‌ழி வ‌குக்கும் என்ப‌தையுண‌ர்ந்து த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் விழித்துக்கொண்டு ம‌த‌ அடிப்ப‌டையிலான‌ எந்த‌வொரு க‌ட்சிக‌ளுக்கோ அல்ல‌து அமைப்புகளுக்கோ ஆத‌ர‌வ‌ளிக்க‌க் கூடாது.  இந்து, கிறித்த‌வ ஏன் இஸ்லாமிய‌  இய‌க்க‌ங்க‌ளாக‌ இருந்தாலும் அவை  த‌டைசெய்ய‌ப்ப‌ட வேண்டும்.

 

 

 

 

 

 

No comments: